நிலைப்படுத்தல் கட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் டாக்ஸி மற்றும் தனியார் வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு ஆதரவை தொடர S$16 மில்லியன் ஓதுக்கீடு

சிங்கப்பூர்: நிலைப்படுத்தல் கட்டத்தின்(Stabilisation phase) போது டாக்ஸி மற்றும் தனியார் வாடகை கார் (PHC) சவாரிகள் பாதிக்கப்படும் என்பதால் அரசாங்கம், ஒட்டுநர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலானவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதும், சமூக செயல்பாடுகள் குறைவதும் எதிர்பார்க்கப்படுவதால் டாக்ஸி மற்றும் தனியார் வாடகை கார் (PHC) சவாரிகள் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சவாலான காலகட்டத்தில் டாக்ஸி மற்றும் PHC டிரைவர்களுக்கான அரசின் ஆதரவை தொடர கூடுதலாக S$16 மில்லியனை ஒதுக்குவதாக போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் நவம்பர் மாதத்திற்க்கான கோவிட்-19 ஓட்டுநர் நிவாரண நிதியின் (CDRF) தற்போதைய ஆதரவை மேம்படுத்தப்படுவதோடு, நவம்பருக்கு பிறகு தற்போதைய ஆதரவு முடிவடையும் போது மேலும் 31 நாட்களுக்கு ஆதரவு நீட்டிக்கப்படும்.

டாக்ஸி மற்றும் PHC ஓட்டுநர்களுக்கு சுமார் 98% ஏற்கனவே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்கள் பூஸ்டர் ஷாட்களைப் பெற கடுமையாக ஊக்குவிப்பதாக அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

(Image source: LTA)