2021 ஐனவரியிலிருந்து இரண்டாம் குழந்தை பெற்று கொள்ளும் தம்பதியினருக்கு கூடுதலாக S$6000 வெள்ளிகள் !!!

சிங்கப்பூரில் 2021 ஜனவரி 1க்கு பிறகு இரண்டாவது குழந்தை பெற்று கொள்ளும் தம்பதியினருக்கு கூடுதலான நிதி ஆதரவு வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இண்டாவது குழந்தைகளுக்கான கூடுதல் நிதி உதவி பற்றி பிரதம மந்திரி அலுவலகத்தின் அமைச்சரான இந்திரானி ராஜா நேற்று (பிப்.26) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இரண்டாவது குழந்தையின் குழந்தை மேம்பாட்டு கணக்கில் (Child Development Account) செலுத்தும் தொகையை அரசாங்கம் இரட்டிப்பாக்கும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த S$3,000 லி்ருந்து S$6,000 ஆக வழங்கப்படும்.

ஏற்கனவே ஒவ்வொரு குழுந்தைக்கும் CDA கணக்கில் வழங்கப்படும் S$3000 வெள்ளியை தவிர இந்த S$6000 வழங்கப்பபடும். மொத்தமாக S$9000 வெள்ளிகள் இரண்டாவது குழந்தைக்காக வழங்கப்படும்.

2021 ஜனவரி 1 முதல் பிறந்த அல்லது பிறக்கவுள்ள தகுதியான குழந்தைகளுக்கு இந்த கூடுதல் நிதி ஆதரவு வழங்கப்படும்.

மேலும் தற்போது தந்தைவழி அல்லது தத்தெடுப்பு விடுப்புக்கு தகுதி பெறாத பெற்றோர்களுக்கும் அரசாங்கம் நிதி சலுகைகளை வழங்கும் ஏன அமைச்சர் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு பற்றிய கூடுதல் தகவலுக்கு,www.madeforfamilies.gov.sg இணைய தளத்தை பார்வையிடவும்.

(Image source: MSF)