சிங்கப்பூர் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டதால், மருத்துவமனையின் ஒரு வார்டு மூடப்பட்டது !!!

சிங்கப்பூர்: ஏப்ரல் 28 அன்று வெளியிட்ட கோவிட் தொற்று பற்றிய அறிக்கையில் ஒரு மருத்துவமனை செவிலியர் உட்பட மூன்று சமூக தொற்றுகளும், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 20 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

வழக்கு 62541, 46 வயதான பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஆவார். அவர் டான் டோக் செங் மருத்துவமனையில் (TTSH) செவிலியராக உள்ளார், மேலும் வார்டு 9 டி என்ற பொது வார்டில் பண புரிகிறார்.

அவர் ஏப்ரல் 27 அன்று இருமல், தொண்டை வலி மற்றும் உடல் வலிகள் இருந்ததால், TTSHல் சோதனை செய்யப்பட்டு அதே நாளில் தொற்று கண்டறியப்பட்டது., மேலும் அவர் NCID இல் தங்கியிருந்தார். அவரது செரோலஜி சோதனை முடிவு நிலுவையில் உள்ளது.

மருத்தவமனை செவிலிருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்ட வார்டை TTSH மூடியுள்ளது, மேலும் அந்த வார்டில் இருந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்களை பரிசோதித்துள்ளது.

இதுவரை, கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு ஆரம்ப சோதனையில் மேலும் 4 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் ஒரு மருத்துவர் மற்றும் 3 நோயாளிகள் ஒரே வார்டில் கவனிக்கப்படுகிறார்கள் என்று MOH கூறியுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த அனைத்து ஊழியர்களும், வார்டு 9Dயில் பணிபுரியும் ஊழியர்களும் அனைத்து பார்வையாளர்கள் மற்றும் நோயாளிகளும் தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார்கள்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள 4 வழக்குகளுக்கான மேலதிக சோதனைகளை மேற்கொண்டு வருவதால், அவை நேற்றைய(ஏப்ரல்.28) வழக்கு எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என MOH தெரிவித்துள்ளது.

(Image source: NHG)