இந்தியா – சிங்கப்பூர் பொருளாதார ஒத்துழைப்பு பற்றிய கூட்டத்தில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு, தமிழக முதல்வர் ஸ்டாலினையும் அமைச்சர் ஈஸ்வரன் சந்தித்தார்.!!!

சிங்கப்பூர் துணை பிரதமர் லாரன்ஸ் வோங், அமைச்சர் கன் கிம் யோங் மற்றும் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் ஆகியோர் புதுதில்லியில் கடந்த செப். 17 அன்று இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்களின் முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டனர்.

பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தவும், ஒத்துழைப்பிற்கான புதிய பகுதிகளை அடையாளம் காணவும் வெளியுறவு, நிதி மற்றும் வர்த்தக அமைச்சர்கள் தலைமையில் புதிய வழிமுறையை (ISMR) இரு நாடுகளும் தொடங்கின.

சிங்கப்பூர் அமைச்சர்கள் குழு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் ISMR இன் முதல் கூட்டத்தில் சந்தித்து பேசினர்.

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே வளர்ந்து வரும் மற்றும் எதிர்காலம் சார்ந்த பகுதிகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளை அமைச்சர்கள் வலியுறுத்தியதாக இந்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிதித்துறை செயல்பாடுகள், பின்டெக், ஒழுங்குமுறை ஒத்துழைப்பு, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் தற்போதைய பொருளாதார ஏற்பாடுகள் போன்ற பிரச்சினைகள் குறித்து இரு தரப்பும் விவாதித்தன.

குறிப்பாக உணவுப் பாதுகாப்பு, ஆற்றல் பாதுகாப்பு, டிஜிட்டல் மயமாக்கல், பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாடு போன்ற பல முக்கியமான துறைகளில் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆய்வு நடந்தது.

ரயில்வே அமைச்சர் மற்றும் தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவை அமைச்சர் ஈஸ்வரன் சந்தித்து, டிஜிட்டல் உள்ளடக்கத்தின் முக்கியத்துவம் மற்றும் எல்லை தாண்டிய டிஜிட்டல் ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதித்தார்.

மேலும் சிங்கப்பூர் போக்குவரத்து மற்றும் வர்த்தக உறவுகள் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் நேற்று(செப்.18) தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தமிழ்நாடு மற்றும் சிங்கப்பூர் இடையே கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

(முதல்வர் ஸ்டாலினை அமைச்சர் ஈஸ்வரன் சந்தித்த போது)

சென்னையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தேன், மாநில நிதி அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன்,மற்றும் தொழில்துறை, தமிழ் அலுவல் மொழி, தமிழ் கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரையும் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் சந்தித்து பேசினார்.

தமிழ்நாடு மற்றும் சிங்கப்பூர் இடையே கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்தியதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான சிங்கப்பூரின் வலுவான உறவை மீண்டும் உறுதிப்படுத்தும் அர்த்தமுள்ள பயணம் என்றும் இந்திய சிங்கப்பூர் மேலும் பலமடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் ஈஸ்வரன் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.

(Image credit: Minister Iswaran)