ஆக்ஸிஜன் மேமிக்க பயன்படும் நான்கு கன்டெய்னர்களை இந்திய விமானப்படை விமானம் சிங்கப்பூரிலிருந்து ஏற்றி சென்றது

சிங்கப்பூரிலிருந்து திரவ ஆக்ஸிஜனை சேமிப்பதற்கு பயன்படும் நான்கு கிரையோஜெனிக் கன்டெய்னர்களை இந்திய விமானப்படை விமானம் சனிக்கிழமையன்று (ஏப்ரல்.24) எடுத்து சென்றதாக சிங்கப்பூரிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

டாடா குழுமம் நன்கொடையாக வழங்கிய இந்த கன்டெய்னர்கள் சிங்கப்பூரிலிருந்து IAF ன் C 17 ஹெவி-லிப்ட் விமானத்தில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டன.

நான்கு கிரையோஜெனிக் ஆக்ஸிஜன் கொள்கலன்களுடன் கூடிய விமானம் மேற்கு வங்காளத்தின் பனகர் விமான நிலையத்தில் நேற்று மாலை 4:30 மணியளவில் தரையிறங்கியது என்று இந்திய விமானப்படை தெரிவித்தது.

கன்டெய்னர் IAF வமானத்தில் ஏற்றப்படுகிறது

கோவிட் வைரஸ் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை பாதிப்பு இந்தியா அதிகரித்து வருகிறது. மேலும் பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள் மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகளின் பற்றாக்குறை அதிகரித்து வருகின்றன.

கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் தேவையான மருத்துவ ஆக்ஸிஜனின் விநியோகத்தை விரைவுபடுத்துவதற்காக வெள்ளிக்கிழமை முதல், IAF வெற்று ஆக்ஸிஜன் டேங்கர்கள் மற்றும் கொள்கலன்களை நாடு முழுவதும் பல்வேறு நிரப்பு நிலையங்களுக்கு அனுப்பி வருகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நியமிக்கப்பட்ட கோவிட்-19 மருத்துவமனைகளுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்களையும் IAF விமானங்கள் கொண்டு செல்கின்றன.

(Image source: HCI, Singapore)