சவுதி அரேபியா விசாவிற்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்கு புதிய சலுகை அறிவிப்பு..!

சவூதி அரேபியா நேற்று (நவ்.18) இந்தியர்கள் தனது நாட்டிற்குச் செல்ல விண்ணப்பிக்கும் போது காவல்துறையின் அனுமதிச் சான்றிதழை (PCC) சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிப்பதாக அறிவித்தது.

இரண்டு மில்லியனுக்கும் அதிகமான இந்திய குடிமக்கள் தற்போது சவுதி அரேபியாவில் இருப்பதாக கூறப்படுகிறது.

சவூதி அரேபியா மற்றும் இந்திய அரசிற்கிடையேயான வலுவான உறவுகள் வலுவடைந்து வருவதால் அந்த முந்தைய விசா தேவையை நீக்கியதாக சவுதி தூதரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.


இந்திய குடிமக்கள் சவுதி அரேபியாவிற்கு பயணிப்பதற்கான விசா பெற காவல்துறையின் அனுமதிச் சான்றிதழ் (PCC) இனி தேவைப்படாது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாவும் சவுதி தூதரகம் தெரிவித்துள்ளது.

இதுவரை, இந்தியர்கள் சவுதி விசாவைப் பெற போலீஸ் அனுமதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. இது புதிய விதி விசா விண்ணப்பத்தை விரைவாகவும் எளிதாகவும் செயல்படுத்தவும் உதவும் என்று கூறப்பட்டுள்ளது.