சிங்கப்பூர் நீச்சல் வீரர் ஜோசப் ஸ்கூலிங் ஒலிம்பிக் அரை இறுதிக்கு தகுதி பெறவில்லை..!

டோக்கியோ ஒலிம்பிக்கில் சிங்கப்பூரின் ஜோசப் ஸ்கூலிங், ஆண்களுக்கான 100 மீட்டர் நீச்சல் இறுதி போட்டி வரை சென்று தனது ஒலிம்பிக் தங்கத்தை தக்க வைக்க முடியாமல் போனது.

ஜோசப் ஸ்கூலிங், நேற்று (ஜூலை 29) டோக்கியோ நடந்த100 மீட்டர் போட்டியில் பரபரப்பாக நாக் அவுட் ஆகி அரை இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார்.

அவர் 2016ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் 50.39 விநாடிகளில் 100 மீட்டர் நீந்தி தங்கப்பதக்கம் பெற்றதோடு ஒலிம்பிக் சாதனை நேரத்தையும் பதிவு செய்திருந்தார்.

ஆனால் நேற்று 100 மீட்டரை நீந்த, 53.12 விநாடிகள் எடுத்து கொண்டார், மேலும் அவரது இந்த ஆண்டின் சிறந்த 52.93 விநாடிகளை விடவும் குறைவாகவே இருந்தார்.

இதன் விளைவாக, பங்கேற்ற 55 நீச்சல் வீரர்களில் 44 வது இடத்தை மட்டுமே பிடிக்க நேரிட்டது. முதல் 16 நீச்சல் வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறியதால், ஒலிம்பிக் ஆண்கள் 100 மீ சாம்பியன் பட்டத்தை அவரால் தக்க வைக்க முடியவில்லை.

போட்டிக்கு பிறகு பேசிய ஸ்கூலிங், முடிவு மிகவும் ஏமாற்றமளிப்பதாக கூறினார், ஆனால் அவர் மீண்டும் விளையாடுவதில் உறுதியாக உள்ளார்.

“தோல்வியை, ஜீரணிப்பது கடினம், ஆனால் அதே நேரத்தில் … இதுபோன்ற முடிவுடன் தனது விளையாட்டு வாழ்க்கை முடிவடைய விரும்பவில்லை என்று நம்புவதாக அவர் கூறினார்.

டோக்கியோவில் தனிப்பட்ட நேரத்தை பிடிக்க முடியும் என்று அவர் நம்பியிருந்ததாகவும் அவர் கூறினார். கடந்த 15 மாதங்களாக உழைத்தோம், அதனால் எனக்கு நிச்சயம் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. சில நேரங்களில் அது பலனளிக்காமல் போய் விடுகிறது என்று ஸ்கூலிங் தெரிவித்தார்.