அவசர காரணங்களுக்காக சிங்கப்பூர்- மலேசியா நாடுகளுக்கிடையேயான எல்லை தாண்டிய பயணங்களுக்கு மே 17 முதல் அனுமதி !!!

சிங்கப்பூர்- மலேசியா நாடுகளுக்கிடையே மரணம் மற்றும் அவசர கராணங்களுக்காக எல்லை தாண்டிய பயணங்கள், மே மாதம் 17 முதல் அனுமதிக்கப்படவுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூருக்கு விஜயம் செய்த மலேசிய வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசைனிடம் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் பேசிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இருதரப்பு ஒத்துழைப்பு பற்றிய பயனுள்ள பேசினர், குறிப்பாக சிங்கப்பூர்-மலேசிய எல்லைகளை பாதுகாப்பாக மற்றும் படிப்படியாக மீண்டும் திறப்பது குறித்து பேசப்பட்டது.

குறிப்பாக மரண நிகழ்வு மற்றும் அவசர காரணங்களுக்காக எல்லை தாண்டிய பயணத்திற்கான அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. இது மே 17 அன்று முதல் செயல்படுத்தப்படும்.

சுகாதார சான்றிதழ்களின் பரஸ்பர தொழில்நுட்ப சரிபார்ப்பு குறித்தும் இரு தரப்பும் ஒப்புதல் ஏற்பட்டது.

இரு நாடுகளிலும் தடுப்பூசி திட்டங்களில் முன்னேற்றம் அடையும்போது ஒரு இது முக்கியமான படி என அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த ஏற்பாடு இருபுறமும் உள்ள கோவிட் நிலைமைக்கு உட்பட்டு, மக்களின் பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.