தங்குமிடங்களில் சிறப்பு கோவிட் சோதனைக்கு பிறகு தனிமைப்படுத்தப்படும் தொழிலாளர்களுக்கு தொடரந்து சம்பளம் வழங்கப்படும் – MOM

சிங்கப்பூர்: தங்குமிடங்களில் சிறப்பு சோதனை நடவடிகைகளின் போது தொழிலாளர்கள் முன்னெச்செரிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டால், அந்த நாட்களுக்கு அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்று மனித வள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

வெஸ்ட்லைட் உட்லேண்ட்ஸ் தங்குமிட கிளஸ்டரை தொடர்ந்து ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, MOM ன் ACE குழு, சுகாதார அமைச்சகம் (MOH), கட்டிட கட்டுமான ஆணையம் (BCA) மற்றும் பொருளாதார மேம்பாட்டு வாரியம் (EDB) ஆகியவற்றுடன் இணைந்து கடந்த வாரம் பல்வேறு தங்குமிடங்கள் மற்றும் வேலை இடங்களில் காலியான கோவிட் சோதனை நடவடிக்கைகளை தொடங்கியது.

இந்த சோதனைகள் ஒவ்வொரு 14 நாட்களுக்கும் தங்குமிட வாசிகளுக்கு செய்யப்படும் வழக்கமான சோதனை (RRT) தவிர கூடுதலாக செயப்படுவதாகும்.

மேலும் முந்தைய தொற்றுநோய்களிலிருந்து குணமடைந்த தொழிலாளர்கள் மற்றும் ஒருபோதும் பாதிக்கப்படாத தொழிலாளர்கள் ஆகியோரும் இதில் அடங்கும். ஏப்ரல் 23 முதல் 26 வரை 5,500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

சில தங்குமிடங்களில் தனிமைப்படுத்தல்கள் விதிக்கப்பட்டால், அங்கு உறுதிப்படுத்தப்பட்ட க்ளஸ்டர் உள்ளன என்று அர்த்தமல்ல. பெரும்பாலான நேரங்களில், வழக்குகள் பழையதா அல்லது புதிய தொற்றா என்பதை தீர்மானிக்க அவ்வாறு செய்யப்படுகிறது.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்கு அவர்களின் சம்பளம் தொடர்ந்து வழங்கப்படும், மேலும் அவர்களின் வேலையில் இல்லாத காலம் வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் தொழிலாளர்களின் விடுப்பு தகுதியின் ஒரு பகுதியாக ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பாக கருதப்படும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பங்களிப்புகளையும் ஒத்துழைப்பையும் MOM பாராட்டுகிறது, ஏனெனில் நோய்த்தொற்றின் சாத்தியமான க்ளஸ்டர்கள் உருவாகுவதிலிருந்து தீர்க்கமாக நிர்வகிப்பதன் மூலம் அவர்களை பாதுகாக்க முடிந்த அனைத்தையும் MOM செய்கிறது.

MOM, முதலாளிகள் மற்றும் தங்குமிட நடத்துபவர்களின் ஒத்துழைப்பையும் தொடர்ந்து விழிப்புடன் இருக்கவும் தங்குமிடங்கள் மற்றும் வேலை இடங்களில் பாதுகாப்பு விதிகளை பின்பற்றமாறும் கேட்டு கொண்டுள்ளது.