பாசிர் பஞ்சாங் முனையத்தில் பணிபுரியும் PSA துறைமுக தொழிலாளர்களுக்கு சிறப்பு கோவிட் சோதனை செய்யப்படும்

சிங்கப்பூர்: நேற்று (மே 4) அன்று உறுதிபடுத்தப்பட ஒரு சமூக வழக்கு பிரானி டெர்மினல் மற்றும் பசீர் பஞ்சாங் டெர்மினல் ஊழியர்களின் முந்தைய வழக்குகளுடன் தொடர்புடையதால் PSA Singapore துறைமுக தொழிலாளர்களுக்கு சிறப்பு கோவிட் சோதனை செய்யப்படவுள்ளதாக MOH தெரிவித்துள்ளது.

நேற்று (மே.4) சமூகத்தில் 1 கோவிட் தொற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களிடம் 15 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சு (MOH) மே 4ம் தேதி இரவு வெளியிட்ட ஊடக அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

வழக்கு 62824, 59 வயதான சிங்கப்பூரர் ஆடவராவார், இவர் GKE எக்ஸ்பிரஸ் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் பிரானி டெர்மினல் மற்றும் பசீர் பஞ்சாங் டெர்மினலில் டிரெய்லர் டிரக் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அவர் மே 1 அன்று கடைசியாக பணியில் இருந்தார்.

அவர் மே 2 அன்று காய்ச்சல் மற்றும் தொண்டை புண் ஏற்பட்டதால், வீட்டிலேயே இருந்தார். அடுத்த நாள், அவர் கிளினிக்கில் மருத்துவ சிகிச்சைக்கு சென்ற போது கோவிட் சோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர் அவசர ஊர்தியில் அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவரது செரோலஜி சோதனை முடிவு நிலுவையில் உள்ளது.

MOHன் விசாரணையில் முந்தைய வழக்குகள் 618221, 626842, 626913 மற்றும் 62824 ஆகியோர் பசிர் பஞ்சாங் டெர்மினலில் பணியில் இருந்தவர்கள், இதனால் இவர்களுக்கு டெர்மினலில் தொற்று ஏற்பட்டிருக்கலாம்.

எனவே ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பசீர் பஞ்சாங் முனையத்தில் நிறுத்தப்படும் PSA Singapore துறைமுக தொழிலாளர்களுக்கு, MOH ஒரு சிறப்பு கோவிட் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக கூறியுள்ளது.

(Image credit: visit Singapore )