ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து, 900 வேலை இடங்களில் MOM அதிகாரிகள் சோதனை !!!

சிங்கப்பூர்: ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து 900 வேலை இடங்களில் கோவிட் பாதுகாப்பு மேலாண்மை விதிகள் பின்பற்றபடுவதை உறுதி செய்ய அதிகாரிகள் ஆய்வு செய்ததாக MOM தெரிவித்துள்ளது.

இந்த வாரம், சமீபத்திய கோவிட்-19 சமூக வழக்கின் வேலை இடத்திற்கும் சென்று MOM அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதுபோன்ற சந்தர்ப்பங்கள் ஏற்படும்போது, மேலும் வேலை இடத்தில் பரவலை தடுக்க பாதுகாப்பு மேலாண்மை விதிகள் (SMM) பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த MOM சோதனைகளை நடத்துகிறது.

MOM அதிகாரி சோதனையின் போது

பரிசோதனையின் போது பல குறைபாடுகள் காணப்பட்டன. பாதுகாப்பான இடைவெளி இல்லாதது, பாதுகாப்பான மேலாண்மை அதிகாரியை நியமிக்கத் தவறியது, மற்றும் வழக்கமான வெப்பநிலை சோதனைகளை செய்ய தவறுவது மற்றும் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு சரியான கட்டுப்பாட்டுன் அனுமதி ஆகியவை குறைபாடுகள் அடங்கும்.

இந்த குறைபாடுகளை கருத்தில் கொண்டு வேலை இடங்களை மூடுமாறு MOM உத்தரவிடும் என கூறப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் கோவிட்-19 நிலைமைக்கு ஏற்ப SMM தேவைகள் படிப்படியாக புதுப்பிக்கப்படுவதால், வேலையிடங்களில் நடைமுறையில் உள்ள SMM தேவைகளை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக, அமலாக்க முயற்சிகளை MOM தொடர்ந்து அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து, 900 வேலையிடங்களை ஆய்வு செய்து சுமார் 10 நிறுவனங்களுக்கு MOM அபராதம் விதித்துள்ளது.

5 ஏப்ரல் 2021 முதல் வேலையிட SMM தேவைகளில் சில தளர்த்தல்கள் இருந்தபோதிலும், முதலாளிகள், அனைவருக்கும் பாதுகாப்பான பணிச்சூழலை தொடர்ந்து வழங்குவது முக்கியம்.

வீட்டிலிருந்து பணிபுரிவது இனி இயல்புநிலையாக இருக்காது என்றாலும், வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடியவர்கள் 75% க்கும் அதிகமாக எந்த நேரத்திலும் வேலையிடத்தில் இல்லை என்பதை முதலாளிகள் உறுதிப்படுத்த வேண்டும்.

இதை கடைபிடிக்காத முதலாளிகளுக்கு அபராதம் விதிக்கப்படலாம், வழக்கு தொடரப்படலாம் அல்லது கடுமையான குறைபாடுகள் என்றால் வேலையிடத்தை மூடுவதற்கு உத்தரவிடப்படலாம் என MOM தெரிவித்துள்ளது.

(Image source: MOM)