மே, ஜூன் மாதங்களில், அதிக ஆபத்துகள் உள்ள உற்பத்தி மற்றும் காட்டுமான துறையின் 400 நிறுவனங்களில் பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்

சிங்கப்பூர்: வரும் மேம மாதம் முதல் ஜூன் மாதம் வரை, 400 உற்பத்தி மற்றும் காட்டுமான நிறுவனங்களில் மனித வள அமைச்சகம்(MOM) ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக மனிதவள இணை்அமைச்சர் ஜாக்கி முகமது தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, உற்பத்தி துறையில் 6 வேலையிட உயிரிழப்புகள் நிகழ்ந்தன, இது 2019ல் 4 ஆக இருந்தது. 2020ம் ஆண்டில் இந்த துறையில் அதிக எண்ணிக்கையிலான ஆபத்தான காயங்கள் ஏற்பட்டன.

குறிப்பாக, இயந்திரம் தொடர்பான சம்பவங்கள் கிட்டத்தட்ட 30% ஆகும், மேலும் இது ஒட்டுமொத்தமாக ஆபத்தான காயங்களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது

இன்று முன்னதாக, இயந்திர பாதுகாப்பை மையமாக கொண்டு ஒரு உற்பத்தி நிறுவனத்தில் ஒரு ஆய்வுக்கு MOM அதிகாரிகளுடன் அமைச்சர் ஜாக்கி முகமதுவும் சென்றார்.

அங்கு போக்குவரத்து நிர்வாகத்தின் பற்றாக்குறை மற்றும் போர்க்லிப்ட்ஸ் போன்ற இயந்திரங்களின் மோசமான பராமரிப்பு உள்ளிட்ட பல குறைபாடுகளை கண்டறிந்ததாகவும் இதனால் MOM அந்த நிறுவனத்திற்கு ஒரு வேலை நிறுத்தல் ஆணையை வழங்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நிறுவனங்கள் தங்கள் பாதுகாப்பு முயற்சிகளை முடுக்கிவிட வேண்டும், குறிப்பாக இயந்திர பாதுகாப்பில். மே முதல் ஜூன் வரை, இயந்திரங்கள் பாதுகாப்பை மையமாக கொண்டு, உற்பத்தி மற்றும் கட்டுமானம் போன்ற அதிக ஆபத்து நிறைந்த துறைகளில் 400 ஆய்வுகள் மூலம், OPS ibis என்ற அமலாக்க நடவடிக்கையை MOM மேற்கொள்ளும்.

இருப்பினும், அமலாக்க முயற்சிகளால் மட்டுமே விபத்துகளை தடுக்க முடியாது. முதலாளிகளும் ஊழியர்களும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும், மேலும் அவர்களின் வேலையிடங்களில் பாதுகாப்பற்கு அதிக பொறுப்பை எடுக்க வேண்டும்.

OPS ibis சரியான இடர் மதிப்பீடுகளை நடத்துவதற்கும் அவற்றின் பணி செயல்முறைகளை மதிப்பாய்வு செய்வதற்கும் நேரம் ஒதுக்குமாறு நிறுவனங்களை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.