டான் டாக் செங்(TTSH) மருத்துவமனையில் மேலும் கோவிட் தொற்றுகள் கண்டறியப்பட்டன, இரண்டு வார்டுகள் மூடப்பட்டன!!!

சிங்கப்பூர்: நேற்று (ஏப்ரல்29) சமூகத்தில் 16 கோவிட் தொற்றுகள் கண்டறியப்படது, அவற்றில் 15 முந்தைய வழக்குகளுடன் தொடர்புள்ளவை, மற்றொரு தொற்று தொடர்பில்லாதது என கூறப்பட்டுள்ளது. அதில் 8 தொற்றுகள் TTSH வழக்கு 62541 உடன் தொடர்புள்ள தொற்று என சுகாதார அமைச்சு (MOH) ஏப்ரல் 29 இரவு வெளியிட்ட ஊடக அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

மொத்தம் 9 வழக்குகள் இதுவரை டான் டாக் செங்(TTSH) மருத்துவமனை கிளஸ்டரில் கண்டறியப்பட்டுள்ளன. இவர்களில் 3 பேர் மருத்துவமனை ஊழியர்கள், 6 பேர் வார்டு 9 டி-யில் சிகிச்சை பெற்ற நோயாளிகளாவார்கள்.

தொற்று கண்டறியப்பட்டதையடுத்து TTSHன் வார்டு 7D மற்றும் வார்டு 9D இரண்டையும் மூடப்பட்டது. இரு வார்டுகளிலும் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுக்கான பரிசோதனை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட வார்டுகளில் இருந்த நோயாளிகள், பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட தொற்றுகளின் அனைத்து நெருங்கிய தொடர்புகளும் தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மற்ற TTSH வார்டுகளில் உள்ள அனைத்து நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கும் கோவிட்-19 சோதனை செய்யப்படும்.

ஏப்ரல் 29 முதல், மருத்துவமனையில் சிக்கலான நோய்களுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளை தவிர வேறு நோயாளிகளுக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்த காலகட்டத்தில், அவசரகால வழக்குகளை தவிர்த்து தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்குகள் ஒத்திவைக்கப்படும், மேலும் உயிருக்கு ஆபத்தான A & E வழக்குகள் பிற மருத்துவமனைகளுக்கு திருப்பி விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது