சிங்கப்பூரில் 50% க்கும் அதிகமானவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸாவது கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது !!!

சிங்கப்பூர் மக்கள்தொகையில் 50% க்கும் அதிகமானவர்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸாவது கோவிட்-19 தடுப்பூசியை பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஆங் யீ கங் தெரிவித்துள்ளார்.

சுமார் 36% பேர் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர். அனைவரும் இணைந்து இந்த எண்ணிக்கையை மேலே உயர்த்த வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

சமீபத்தில் கோவிட் அமைச்சர்களின் செய்தியாளர் கூட்டத்தில், கோவிட்-19 தொற்று பரவலாக தொடர்ந்து இருக்கும் என்ற கருத்து நிபுணர்களிடையே அதிகரித்து வருவதாக பகிர்ந்து கொண்டதை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது இன்ப்ளூயன்ஸா போன்று சமூகத்தில் இந்த வைரஸ் தொடர்ந்து உருமாறி பரவலாம், மேலும் நாம் இதோடு வாழ வேண்டும், அதே நேரத்தில் நம்மை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

அதிர்ஷ்டவசமாக, கடந்த ஆண்டு தேவையான வசதிகளை உருவாக்கியதால், இப்போது மிக விரைவாக சோதிக்கலாம், தொடர்பு கண்டறியலாம் மற்றும் தனிமைப்படுத்தலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் மேலும் செல்ல, F&B மற்றும் உடற்பயிற்சி மையங்களை திறக்க உதவுவதற்கும், பயணத்தை மீண்டும் தொடங்குவதற்கும், தடுப்பூசி விகிதம் அதிகமாக இருக்க வேண்டும். இதனால் சமூகத்தில் வைரஸ் பரவினாலும், நாம் சிறப்பாக பாதுகாக்கப்படலாம்.

முடிந்தவரை விரைவாக தடுப்பூசி போடப்படுகிறது, ஆனால் உலகளாவிய தேவை அதிகமாக இருப்பதால், தடுப்பூசி வரத்து அளவுடன் உள்ளது. அதிக தடுப்பூசி மருந்துகள் கிடைப்பதை உறுதிப்படுத்த அரசாங்கத்தால் முடிந்த அனைத்தும் செய்யப்படும்.

எனவே, தடுப்பூசிக்கு உங்கள் முறை வரும்போது, தயவுசெய்து அவ்வாறு செய்யுங்கள், உங்கள் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களையும் அவ்வாறே செய்ய ஊக்குவிக்குமாறும் அமைச்சர் கேட்டு கொண்டுள்ளார்.

(Image credit: MOE via Mr Ong yer Kung)