வடகிழக்கு ரயில் தடத்தில் இன்சுலேட்டர் மாற்றும் பணி திட்டமிடப்பட்ட காலத்துக்கு முன்பாகவே முடிவடைந்தது – SBS Transit

சிங்கப்பூர்: வடகிழக்கு ரயில் தடத்தில் இன்சுலேட்டர் மாற்றும் முன்பாகவே முடித்து விட்டதால் ரயில் சேவை முன்னதாக நிறுத்தப்படாது என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது

2021 மார்ச் 28 அன்று வடகிழக்கு தடத்தில் ஏற்பட்ட இடையூறு அதன் மேல்நிலை கேடனரி அமைப்பில் பழுதான இன்சுலேட்டரின் காரணமாக ஏற்பட்டது.

அதை தொடர்ந்து, எஸ்பிஎஸ் டிரான்சிட் லிமிடெட் இன்சுலேட்டர் மாற்றும் பணிகளை தீவிரப்படுத்தியது. இந்த பணிகளுக்காக வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் #NEL ல் 1.5 மணிநேரம் முன்கூட்டியே ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

இது இன்சுலேட்டர்களை மாற்றுவதற்கு தொழிலாளர்களுக்கு அதிக நேரம் கிடைக்கப்பெற்று, ஒவ்வொரு இரவும் அந்த வேலை நடைபெற்று வந்தது.

செப்டம்பர் மாதத்தில் அந்த பணிகளை முடிப்பதற்கு பதிலாக, இந்த வார தொடக்கத்தில் எஸ்பிஎஸ் டிரான்சிட் லிமிடெட் முழு வேலைகளையும் முடித்து விட்டது.

ரமலான் மாதம் உட்பட, மிகவும் கடினமாக உழைத்து வரும் பராமரிப்பு குழுவினருக்கு போக்குவரத்து அமைச்சர் ஆங் யீ கங் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த பணிகள் முடிந்துவிட்டதால் ஹார்பர்பிரண்ட் – தோபி காட் நிலையங்களுக்கு இடையேயான ரயில் சேவை, மே மாதம் 7 மற்றும் 8ம் தேதி திட்டமிடப்படி முன்னரே நிறுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.