மின் பழுது காரணமாக வடகிழக்கு பாதையில் உள்ள ரயில் நிலையங்களில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது் -SBS

சிங்கப்பூர்: 28 மார்ச் இன்று காலை 7.00 மணியளவில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக வடகிழக்கு தடமான (NEL) NE 17 புங்க்கோல் நிலையம் மற்றும் NE 12 சிரங்கூன் நிலையத்திற்கு இடையே ரயில் சேவை தடைபட்டுள்ளது.

NE12 சிரங்கூன் நிலையம் மற்றும் NE1 ஹார்பர்பிரண்ட் நிலையம் ஆகியவற்றுக்கு இடையேயான ரயில் சேவை தொடர்ந்து இயக்கப்படுகிறது.

சேவை பாதிப்பால் NE17 புங்க்கோல் மற்றும் NE12 செரங்கூன் நிலையங்களுக்கு இடையில் நியமிக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் இலவச வழக்கமான மற்றும் பிரிட்ஜிங் பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன.

ரயிலுக்கு மின்சாரம் வழங்கும் சிஸ்டத்தில் பழுது ஏற்பட்டது. புவாங்காக்(Buangkok) நிலையத்தில் அதன் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது,

மேலும் அதை சரிசெய்ய SBS பொறியாளர்கள் தளத்தில் உள்ளனர், பழுதை சரிசெய்ய மூன்று மணி நேரம் வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக SBS தெரிவித்துள்ளது.

ஏற்பட்ட சிரமத்திற்கு அனைத்து பயணிகளிடமும் மன்னிப்பு கோருவதாக SBS கூறியுள்ளது.