சிங்கப்பூர்: சிக்கலான நோய்களால் பாதிக்கப்படும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு புதிய “C4M” காப்பீடு: NTUC

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக Care4Migrantworkers (C4M) என்ற ஒரு புதிய காப்பீட்டு திட்டத்தை, என்.டி.யூ.சி இன்கம் நிறுவனம் வழங்கவுள்ளதாக இன்று (செப்.30) என்.டி.யூ.சி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த காப்பீடு திட்டத்தின் மூலம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையிடங்களுக்கு வெளியே சிக்கலான உடல் நலக்குறைவுகள் ஏற்படும் போது சிகிச்சை பெற முடியும். இந்த காப்பீடு தொழிலாளர்களின் வேலை நேரங்களுக்கு பிறகும் காப்புறுதி அளிக்கும்.

இந்த திட்டத்திற்காக சிங்கப்பூரை தளமாக கொண்ட LEAP201, மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர் மையம் (MWC) ஆகியவை கூட்டாக, S$ 600,000 நிதி திரட்டியுள்ளன. செப்டம்பர் 30, அன்று MWC பொழுதுபோக்கு கிளப்பில் இரு அமைப்புகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான போது இந்த தொகை பற்றி தெரிய வந்தது.

மாரடைப்பு, புற்றுநோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு ஆகிய நோய் பாதிப்புகளால் சிங்கப்பூரில் தொழிலாளர்கள் மரணமடைந்துள்ளார்கள் என்று குறிப்பிட்டு இந்த காப்பீட்டு திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி MWC தலைவர் இயோ குவாட் குவாங், கூறினார்.

திரட்டப்பட்ட நிதி, முதல் இரண்டு ஆண்டுகளுக்கு, பதிவு செய்யும் முதல் 50,000 புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் Care4Migrantworkers (C4M) காப்பீட்டு தொகைக்கு மானியமாக வழங்க பயன்படுத்தப்படும்.

இந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் பலர் தங்கள் குடும்பங்களின் ஒரே வருமானம் ஈட்டும் நபராக இருப்பதால், C4M காப்பீடு செய்யப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிர்பாராத நோய் வாய்ப்பட்டால் மொத்தமான தொகை வழங்கப்படும்.

இந்த புதிய காப்பீட்டு திட்டத்தின் மூலம், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஒரு மாதத்திற்கு 75 காசுகள் என்ற குறைந்த காப்பீட்டு செலவில் சிக்கலான நோய்களுக்கு எதிராக பாதுகாப்பது சாத்தியமாகியுள்ளது.

தொழிலாளர்கள் துரதிர்ஷ்டவசமானதாக நடந்தால், காப்பீடு செய்யப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளி மற்றும் அவரின் குடும்பத்திற்கும் ஒரு கடினமான நேரத்தில் C4M திட்டம் பயன்படும்.

தொழிலாளர்களுக்கு இந்த காப்பீடை பெற மானியத்துடன், முதலாளிகள் முதல் இரண்டு வருட பாதுகாப்புக்கு ஆண்டுக்கு $3 மட்டுமே செலுத்தினால் போதும். மானியம் இல்லாமல், C4M வருடத்திற்கு $9 பிரீமயம் செலுத்த வேண்டும்.

C4M கீழ், காப்பீடு செய்யப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளி நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தால் அல்லது, நிரந்தரமாக செயலிழந்து போனால் அல்லது 37 வகை சிக்கலான நோய்களில் ஒன்று கண்டறியப்பட்டால் பாலிசி தொகையாக S$10,000 செலுத்தப்படும்.

புதிய காப்பீட்டுத் திட்டத்தில் ஆரம்பத்தில் விரும்புவோர் தங்கள் ஆர்வத்தை பதிவு செய்ய MWCயை feedback@mwc.org.sg என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

1 ஜனவரி 2021 க்குள் C4M காப்பீடுகளை முதலாளிகள் வாங்க முடியும் என என்.டி.யூ.சி குறிப்பிட்டுள்ளது.