சிங்கப்பூரில் உள்ள குளிரூட்டும் பெட்டிகளுக்கான compressor உற்பத்தியை, Panasonic நிறுவனம் நிறுத்த உள்ளது, 700 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள்

சிங்கப்பூர்: செப்டம்பர் 2022 இறுதிக்குள் சிங்கப்பூரில் குளிரூட்டும் பெட்டிகளுக்கான compressor உற்பத்தியை நிறுத்தி உள்ளதாக Panasonic நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாற்றாக மலாக்கா (மலேசியா) மற்றும் வூக்ஸி (சீனா) ஆகியவற்றில் உள்ள தற்போதைய வசதிகளில் compressor உற்பத்தி நடவடிக்கைகளை பானாசோனிக் ஒருங்கிணைக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்த பானாசோனிக் நிறுவனத்தின் பிரிவு, குளிர்சாதன பெருக்கிகள், நீர் குளிரூட்டிகள் மற்றும் விற்பனை இயந்திரங்களுக்கான இன்வெர்ட்டர் கம்ப்ரசர்களை உற்பத்தி செய்வதில் உலகளாவிய ரீதியில் Compressor உற்பத்தியாளர்களில் முக்கிய நிறுவனமாக கடந்த 49 வருடமாக புகழ் பெற்றுள்ளது.

பானாசோனிக் நிறுவனத்தின் R&D பிரிவு, சிங்கப்பூரில் அதன் இயக்கத்தை தொடரும், மேலும் குளிரூட்டும் பெட்டிகளுக்கான compressor வணிகத்தின் உலகளாவிய தலைமையகமாக நிறுவனம் தொடர்ந்து பணியாற்றும் என கூறப்பட்டுள்ளது.

இந்த முடிவால் மொத்தமாக 700 ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசு நிறுவனங்கள், மின்னணு மற்றும் மின் தொழிற்சாலை தொழிலாளர்களுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றி வருவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள பானாசோனிக் குழுமம் அதிக மதிப்புள்ள உற்பத்தி, R & D மற்றும் ஆசியா பசிபிக் தலைமையகம் உட்பட பல்வேறு வணிக களங்களில் 1,400 க்கும் மேற்பட்ட ஊழியர்களை தொடர்ந்து கொண்டிருக்கும், மற்றும் நிறுவன வளர்ச்சி உத்திகளை ஆதரிக்க சிங்கப்பூரில் தொடர்ந்து முதலீடு செய்யும் என பானாசோனிக் நிறுவனம் நேற்று (செப்.23) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

(Image source: Google map)