கோவிட் தொற்றுகள் கண்டறியப்பட்டதால், பாசிர் பஞ்சாங் மொத்த விற்பனை மையம் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மூடப்படும்

சிங்கப்பூர்: பாசிர் பஞ்சாங் மொத்த விற்பனை மையம் (PPWC) சுத்தம் மற்றும் கிருமி நீக்க பணிகளை செய்வதற்காக, 27 செப்டம்பர் 3 மணி முதல் 3 நாட்களுக்கு மூடப்படும் என்று சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) தெரிவித்துள்ளது.

வளாகத்தில் பணிபுரியும் மற்றும் பார்வையிடும் நபர்களிடையே கோவிட் தொற்றுகள் கண்டறியப்பட்டதால் சுத்தம் செய்யப்படவுள்ளது. PPWC, செப்டம்பர் 30 வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு மீண்டும் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

பழங்கள் மற்றும் காய்கறிகள் விநியோகத்தில் சில இடையூறுகள் இருந்தாலும், இது மிகவும் குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கும், ஏனெனில் சந்தைகளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் கடைகள் பொதுவாக திங்கள் கிழமைகளில் மூடப்படும்.

சிங்கப்பூர் பழங்கள் மற்றும் காய்கறி இறக்குமதிகளில் PPWC முறையே 30% மற்றும் 50% கையாள்கிறது.

PPWC யை தற்காலிகமாக மூடுவதால், உணவு விநியோகத்தில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க பழங்கள் மற்றும் காய்கறிகள் சங்கங்கள், பாதிக்கப்பட்ட வணிகர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் போன்றகளுடன் SFA நெருக்கமாக பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளது.

பெரிய பல்பொருள் அங்காடிகளும், தங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளின் இருப்பை அதிகரிக்க முயற்சிக்கிறது.

இந்த காலகட்டத்தில் நுகர்வோர் பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்க அவசரப்பட வேண்டாம், தேவையானதை மட்டும் வாங்குமாறு கேட்டுக்கொள்வதாக SFA தெரிவித்துள்ளது.

PPWC மீண்டும் திறக்கப்படும் போது பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை மேம்படுத்தப்படும். PPWC ல் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் 14 நாடகளுக்கு ஒரு முறை இருந்த சோதனை 7-நாட்களுக்கு ஒரு முறை என்று மாற்றப்புடும்.

அனைத்து குத்தகைதாரர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீண்டும் மையத்திற்கு திரும்புவதற்கு முன் மீண்டும் சோதிக்கப்படுவார்கள். வர்த்தக பார்வையாளர்களுக்கும் வருகைக்கான சோதனை தொடரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

(Image credit: SFA)