அக்டோபர் மாதம் முதல் சிங்கப்பூர் பாஸ்போர்ட்டின் செல்லுபடியாகும் காலம் 10 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது !!!

சிங்கப்பூர் பாஸ்போர்ட்டின் செல்லுபடியாகும் காலம், 2021 அக்டோபர் 1 அல்லது அதற்கு பிறகு பாஸ்போர்ட் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிங்கப்பூர் குடிமக்களுக்கு தற்போதைய 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்று குடியுரிமை மற்றும் சோதனை சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது.

இது பாஸ்போர்ட் புதுப்பித்தல்களின அளவை குறைப்பதோடு சிங்கப்பூரர்களுக்கு அதிக வசதியை வழங்கும். பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது, அது S$ 70 வெள்ளிகளாக இருக்கும்.

ஆனால் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் பாஸ்போர்ட்டின் செல்லுபடியாகும் காலம் ஐந்து ஆண்டுகளாக மட்டுமே இருக்கும்.

ஏப்ரல் 2005 இல், பயோமெட்ரிக் பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்திய போது, சிங்கப்பூர் பாஸ்போர்ட்டின் செல்லுபடியாகும் காலம் 10 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

தொழில்நுட்பத்தின் ஸ்திரத்தன்மையை கண்காணிக்கவும் மேம்பாடுகளை இணைக்கவும் ICAவுக்கு அனுமதிப்பதற்காக 2005 ம் ஆண்டில் செல்லுபடி காலம் குறைக்கப்பட்டது.

பயோமெட்ரிக் பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகள் ஆகின்றன. பயணிகளின் அடையாளத்தை சரிபார்க்க உலகெங்கிலும் உள்ள குடியுரிமை அதிகாரிகள் பயோமெட்ரிக்ஸ் ஸ்கிரீனிங் தொழில்நுட்பத்தை இப்போது பரவலாக பயன்படுத்துகின்றனர்.

இதனால் சிங்கப்பூர் பாஸ்போர்ட்டின் பாதுகாப்பு அல்லது உலகளாவிய நம்பிக்கையை சமரசம் செய்யாமல் சிங்கப்பூர் பாஸ்போர்ட்டின் செல்லுபடியை 10 ஆண்டுகளாக உயர்த்துவது இப்போது சாத்தியமானது என்று ICA தெரிவித்துள்ளது.

(Image credit: ANI news)