சிங்கப்பூர்: பணம் பெறுபவரை சேர்க்காமலேயே PayNowல் இனிமேல் $1000க்கு மேல் அனுப்பலாம்: ABS

பணம் பெறுபவரை சேர்க்காமல் அதிக மதிப்பு பரிவர்த்தனைகளை செய்வதற்கான வசதியை வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும் என்று சிங்கப்பூரில் உள்ள வங்கிகளின் சங்கம் (ABS) ஊடக வெளியீடு ஒன்றில் தெரிவித்துள்ளது.

PayNowல் பங்கேற்கும் ஒன்பது வங்கிகளும் குறைந்தது S$5,000 அல்லது அதற்கு மேற்பட்ட தற்காலிக பரிவர்த்தனைகளையும் அனுமதிக்கும் என்று ABS அறிவித்துள்ளது.

இருப்பினும் S$ 1,000 வெள்ளிக்கு அதிகமான பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் இரண்டாவது அங்கீகார (2FA) முறையை பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதனால் இனிமேல் வாடிக்கையாளர்கள் வணிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு கூடுதலான அளவு பரிவர்த்தனைக்கு PayNowயை பயன்படுத்த முடியும். ஒன்பது வங்கிகளுக்கும் மாற்றப்பட்டுள்ள புதிய வரம்புகள் விவரம் பின்வருமாறு:

New PayNow Limit, (data, ABS)

இணைய வங்கி மற்றும் மொபைல் பயன்பாடு இரண்டுக்கும் PayNow வரம்பு பொருந்தும், மேலும் ஸ்கேன்-மற்றும்-பே பரிவர்த்தனைகள் மற்றும் பெறுநரின் NRIC, மொபைல் எண் அல்லது தனித்துவமான நிறுவன எண் (UEN) யை உள்ளிடுவதன் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் ஆகியவற்றிற்கும் இந்த மாற்றம் பொருந்தும்.

மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் PayNow வரம்பை அவர்களின் விருப்ப அளவிற்கும் வைத்துக்கொள்ளலாம்.

ஆகஸ்ட் -2020 இறுதி நிலவரப்படி, 4.46 மில்லியனுக்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட PayNow பயனர்கள் உள்ளனர், அவர்கள் ஜூன் 2017 இல் PayNow அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து மொத்தமாக S$34 பில்லியனுக்கும் அதிகமான பணத்தை பிற கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர்.

PayNowயை ஒரு பயனுள்ள வசதி என்றும் நிதிகளை தடையின்றி மாற்றுவதற்கான பாதுகாப்பான வழிமுறை என்றும் ஊக்குவிக்க ABS தொடர்ந்து தொழில்துறையுடன் இணைந்து செயல்படும் என கூறியுள்ளது. (Image credit: HSBC)