சிங்கப்பூரில் 45 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், கோவிட் தடுப்பூசிக்கு ஜூன் மாதம் முதல் பதிவு செய்யலாம் !!!

நேற்று (ஏப்ரல்.5) பாராளுமன்றத்தில், எம்.பி.க்கள், சிங்கப்பூரின் கோவிட் -19 தடுப்பூசி தொடர்பாக கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் ஜனில் புதுச்சேரி விளக்கமளித்துள்ளார்.

45 வயதிற்கு உட்பட்டவர்களை விரைவில் தடுப்பூசிக்கான இடங்களை பதிவு செய்ய அழைக்கும் திட்டங்கள் உள்ளதை அமைச்சர் பகிர்ந்து கொண்டார்.

சுமார் 1.05 மில்லியன் நபர்கள் தடுப்பூசியின் ஒரு டோஸையாவது பெற்றுள்ளனர் என்றும், அதில் 468,000 க்கும் மேற்பட்ட நபர்கள் தங்களது இரண்டாவது டோஸ் மற்றும் முழு தடுப்பூசி முறையையும் பூர்த்தி செய்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்றுவரை, 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தகுதி வாய்ந்த முதியவர்களில் சுமார் 60%, மற்றும் 60 முதல் 69 வயதுடைய தகுதி வாய்ந்த முதியவர்களில் 70% க்கும் மேற்பட்டவர்கள் கோவிட் தடுப்பூசியை பெற்றுள்ளனர் அல்லது அவர்களின் தடுப்பூசிக்கான நேரங்களை பதிவு செய்துள்ளனர்.

45 முதல் 59 வயதிற்குட்பட்ட குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தங்களது தடுப்பூசிகளுக்கு பதிவு செய்ய அழைக்கப்பட்டார்கள். அதில் 500,000 அல்லது பாதிக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசிக்கு பதிவு செய்துள்ளார்கள் என அமைச்சர் கூறினார்.

45 வயதிற்குட்பட்டவர்களும் தடுப்பூசிக்காக பொறுமையாக காத்திருக்கிறார்கள். தற்போதைய அட்டவணையின் அடிப்படையில், 45 வயதுக்கு கீழ் உள்ளவர்களை தடுப்பூசிக்கு பதிவு செய்ய ஜூன் மாதத்தில் அழைக்க அரசு திட்டமிட்டுள்ளது என்று அமைச்சர் ஜனில் புதுச்சேரி பாராளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.

(Image source: Minister Masagos Zulkifli)