சிங்கப்பூரில் தற்கோதைய இரண்டாம் கட்ட கட்டுப்பாடுகளிலிருந்து தளர்வுகள் அளிக்கப்படும் போது தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு மட்டுமே தளர்வுகள் கிடைக்கும் …!!!

சிங்கப்பூர் கோவிட் பாதிப்பு நிலைமை மற்றும் கோவிட் தடுப்பூசி் பற்றி இன்று (ஜூலை.26) நாடாளுமன்றத்தில் அமைச்சக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது பேசிய அமைச்சர் ஙாரனஸ் வாங் சிங்கப்பூரில் 70% பேர் தடுப்பூசி பெற்ற பிறகு தளர்வுகள் வழங்கப்படும் என்று கூறினார். அதாவது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தற்போது உள்ள இரண்டாம் கட்ட கட்டுப்பாடுகளை தளர்த்துவது பற்றி பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.

தற்போதுள்ள KTV ஓய்வகங்கள், ஜூராங் மீன வள துறைமுக க்ளஸ்டர்கள் ஆகியவற்றில் தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து நிலைமை கட்டுக்குள் வந்தால் தளர்வுகள் அளிப்பது சாத்தியமாகும் என அமைச்சர் கூறினார்

ஆனால் தளர்வுகள் அளிக்கப்பட்டால் அது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கானதாக இருக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். உடற்பயிற்சி கூடங்களில் உடற்பயிற்சி செய்வது, உணவகங்களில் உணவருந்துவது போன்றவற்றிற்கு தளர்வுகள் அளிக்கப்படலாம்.

மேலும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பயணத்திற்கு பிறகு, சிங்கப்பூர் வரும் போது தங்கும் அறிவிப்பு (SHN) இல்லாமல் தளர்வு வழங்கப்படலாம் என்று அமைச்சர் லாரன்ஸ் தெரிவித்தார். தடுப்பூசி போடாதவதர்கள் பயணம் செய்யலாம், ஆனால் அவர்கள் தங்கும் அறிவிப்பை(SHN) பின்பற்ற வேண்டும்.

செப்டம்பர் தொடக்கத்தில் சிங்கப்பூரில் 80% பேர் தடுப்பூசி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, அப்போது மேலும் தளர்வுகள் அளிக்கப்படலாம் என்று திரு லாரன்ஸ் வாங் குறிப்பிட்டார்.

(Image source: MCI Singapore)