PIE நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் தொழிலாளர் ஒருவர் மரணமடைந்தார், 16 பேர் காயமடைந்தனர்

சிங்கப்லூர்: இன்று (ஏப்ரல். 20) காலை PIE நெடுஞ்சாலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றி் சென்ற போக்குவரத்து வாகனம் ஒரு பெரிய விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்ததாக புலம்பெயர்ந்த தொழிலாளர் மையம்(MWC) தெரிவித்துள்ளது.

விபத்தில் 17 லாரி பயணித்த தொழிலாளரகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அவர்களில் இருவர் மயக்கமடைந்த நிலையில் இருந்தனர்.

இந்த விபத்தில் தொழிலாளர் ஒருவர் மரணமடைந்தார். மேலும் 16 பேர் காயமடைந்தனர். இன்று மாலை நிலவரப்படி, காயமடைந்த 9 தொழிலாளர்கள் சிறு காயங்களுக்கு சிகிச்சை பெற்ற் பிறகு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 7 பேர் இன்னும் மருத்துவமனையில் உள்ளனர். 7 பேரில் 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) உள்ளனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர் மையம் (MWC) பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் முதலாளியுடன் தொடர்பில் உள்ளதாகவும் மற்றும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அவர்களுடன் நெருக்கமாக செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.

வேலை இடத்திற்கு செல்லும் வழியில் விபத்து நடந்ததால், அவர்கள் வேலை காயம் இழப்பீட்டு சட்டத்தின் (WICA) கீழ் பாதுகாக்கப்படுவார்கள்.

இறந்தவர்களின் அன்புக்குரியவர்களை MWC தொடர்பு கொண்டு அனுதாபங்களை வழங்குவதோடு, வேலை காயம் இழப்பீட்டு சட்டத்தின் கீழ் இழப்பீடு செலுத்த சிறிது நேரம் ஆகும் என்பதால் அவர்களின் குடும்பத்திற்கு இடைக்கால நிதி உதவிகளையும் வழங்குகிறது.

36 வயதான ஆண் லாரி டிரைவர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய காரணத்தின்காக கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் விசாரணை நடந்து வருகிறது