சிங்கப்பூர் துணைப் பிரதமர் லாரன்ஸ் வாங், இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார், இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தனர்..!!

சிங்கப்பூர் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கான் கிம் யோங் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேற்று (செப்.19) புதுதில்லியில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் உடனிருந்தார்.

இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை, குறிப்பாக டிஜிட்டல் இணைப்பு, க்ரீன் ஹைட்ரஜன் மற்றும் பின்டெக் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர்.

பல துறைகளில் சிங்கப்பூரின் முக்கியமான கூட்டாளராக இந்தியா உள்ளது. தொற்றுநோய் தணிந்து வருவதால் இருதரப்பு ஈடுபாடுகளின் வேகம் கணிசமாக அதிகரித்துள்ளதாக லாரன்ஸ் வாங் பிரதமர் சந்திப்புக்கு பிறகு தெரிவித்தார்.

முன்னதாக குஜராத் மாநிலத்திற்கு துணை பிரதமர் லாரன்ஸ் வாங் சென்ற போது குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அம்மாநில் நிதியமைச்சர் கனுபாய்்தேசாய்்ஆகியோரை சந்தித்தார்.

குஜராத் பயணத்தின் போது FinTech நிறுவனங்கள் இரு சந்தைகளிலும் புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை பரிசோதனை செய்து சோதனை செய்வதற்கான உடன்படிக்கை செய்யப்பட்டது.

மேலும் பங்கு சந்தை முதலீட்டாளர்கள் சிங்கப்பூரின் SGX மூலம் இந்தியாவின் NSE இல் டெரிவேட்டிவ் ஒப்பந்தங்களை தடையின்றி வர்த்தகம் செய்யும் உடன்படிக்கையும் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது..

சிங்கப்பூரும் குஜராத்தும் நெருங்கிய மற்றும் பரந்த அடிப்படையிலான உறவில் உள்ளதாக லாரன்ஸ் வாங் குறிப்பிட்டுள்ளார். குஜராத் மாநிலத்தில் சிங்கப்பூர் இரண்டாவது பெரிய முதலீட்டாளர் என்றும், சிங்கப்பூருக்கான இந்தியாவின் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 30% குஜராத்தில் இருந்து வருவதாகவும் லாரன்ஸ் வாங் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

(Image: PMO India)