மெரினா பே சாண்ட்ஸ் அருகே துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் காணப்பட்ட, 29 வயதான ஆண் காவல்துறை அதிகாரி மரணம்

சிங்கப்பூர்: கடந்த திங்கள் (செப்டம்பர் 19) காலை மெரினா பே சாண்ட்ஸ் அருகே துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் காணப்பட்ட, 29 வயதான ஆண் காவல் அதிகாரி பின்னர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.

சம்பவம் நடந்த அன்று காலை பணிக்கு வந்திருந்த அதிகாரி, தனது கை துப்பாக்கியை எடுத்துள்ளார். பின்னர் அவர் மெரினா பே சாண்ட்ஸுக்கு அருகிலுள்ள பேப்ரன்ட் அவென்யூ வழியாக போர்டுவாக் சென்றார்.

காலை 9.44 மணியளவில், பேப்ரன்ட் அவென்யூவில் மூன்று துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக காவல்துறைக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது.

பின்னர் அந்த அதிகாரி தலையில் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் காணப்பட்டார். அவர் தனது தலையின் வலது பக்கத்தில் மூன்றாவது முறை சுடுவதற்கு முன்பு, அவர் இரண்டு முறை வானத்தை நோக்கிச் சுட்டதாக நம்பப்படுகிறது.

மயக்கமடைந்த அதிகாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் கை துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது.

காவல் துறையினர் இதை இயற்கைக்கு மாறான மரணம் என வகைப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில், அவர்கள் சதி இருப்பதாக சந்தேகிக்கவில்லை.

இந்த அதிகாரி செப்டம்பர் 2014 ல் காவல்துறையில் சேர்ந்து மத்திய காவல் பிரிவில் அதிகாரியாக இருந்தார். விசாரனைகளின் அடிப்படையில், அவர் தனது பிரிவு, மேற்பார்வையாளர்கள் அல்லது ஆலோசகர்களிடம் உதவி ஏதும் கேட்கவில்லை. என கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் காவல்துறையில் உள்ள ஒவ்வொரு பிரிவிலும் துணை ஆலோசகர்கள் உள்ளனர், அவர்கள் பாதிக்கப்பட்ட அதிகாரிகளை அடையாளம் காணவும் தேவையான ஆதரவை வழங்கவும் அடிப்படை ஆலோசனை திறன்களில் பயிற்சி பெற்றவர்களாவர். ஆலசனை தேவைப்படும் அதிகாரிகள், உள்-உளவியலாளர்கள் அல்லது வெளிப்புற ஆலோசனை சேவை வழங்குநர்களுடன் நேருக்கு நேர் ஆலோசனைக்கு செல்லலாம் என SPF கூறியுள்ளது.

(Image source: Google street view)