மறுகட்டமைக்கப்பட்ட பாசிர் ரிஸ் பஸ் இன்டர்சேஞ்ச் ஜூலை 3ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது

வரும் 3 ஜூலை முதல், மறுசீரமைக்கப்பட்ட பாசிர் ரிஸ் பஸ் இன்டர்சேஞ்ச் செயல்பட துவங்கும் என்று நிலப்போக்குவரத்து ஆணையம்(LTA) தெரிவித்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட பொது போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வு இடங்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஏற்க அம்சங்கள் மற்றும் வசதிகளை கொண்டிருக்கும்.

மறுகட்டமைக்கப்பட்ட பேருந்து இணைப்பு நிலையம் பழைய பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கியதோடு பாசிர் ரிஸ் சென்ட்ரலின் ஒரு புதிய பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து இயங்கும் பேருந்து சேவைகளில் எந்த மாற்றங்களும் இருக்காது. இருப்பினும், சில பேருந்துகளுக்கான ஏறுமிடம் மற்றும் இறங்குமிடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பாசிர் ரிஸ் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்துடன் (ITH) இணைக்க மறுசீரமைப்பு பணிகள் செய்யப்பட்டன என்று கூறப்பட்டுள்ளது.

சோலார் பேனல் பொருத்தப்பட்ட பேருந்து

சோலார் பேனல் பொருத்தப்பட்ட பேருந்து சேவை எண் 15, பாசிர் ரிஸ் பஸ் இன்டர்சேஞ்சிலிருந்து இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.