சிங்கப்பூர் வாசிகள் வரும் அக்டோபர் 1 முதல் இணையத்திலேயே முகவரி மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்

வரும் அக்டோபர் 1, முதல், குடியிருப்பு முகவரி மாற்ற வேண்டிய அனைத்து சிங்கப்பூர் வாசிகளும் (சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தர வாசிகள்) இணையத்திலேயே செய்யலாம் என சிங்கப்பூர் குடியுரிமை சோதனை ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது

தேசிய பதிவு சட்டத்தின் கீழ், அனைத்து அடையாள அட்டை வைத்திருப்பவர்களும் ஒரு புதிய முகவிரிக்கு சென்ற 28 நாட்களுக்குள் முகவரி மாற்றத்தை செய்ய வேண்டும்.

தற்போது உள்ள செயல்முறைப்படி அருகில் உள்ள காவல் நிலையத்தில் அல்லது ICA அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் நேரில் சென்று முகவரி மாற்றம் செய்ய செய்யலாம்.

ICA சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, சிங்கப்பூர் வாசிகள் தங்கள் முகவரியை உள்ளூரில் அல்லது வெளிநாடுகளில் இருந்தாலும் மாற்றிக்கொள்ள அக்டோபர் 1 முதல் புதிய மின் சேவையை அறிமுகப்படுத்துகிறது.

  • விண்ணப்பதாரர்கள் தங்கள் சிங்பாஸை பயன்படுத்தி ICAவின் இணையதளத்தின் இந்த இணைப்பில் Change of Address முகவரி மாற்றும் சேவையை பயன்படுத்தலாம்.
  • விண்ணப்பதாரரின் புதிய முகவரிக்கு தபால் மூலம் ஒரு PIN யை அனுப்பும். அந்த PIN யை விண்ணப்பதாரர்கள் புதிய முகவரியை சரிபார்க்க ICA இணையதளத்தில் உள்ளிட வேண்டும்.
  • சரிபார்த்த பின்னர், விண்ணப்பதாரர்கள் தங்கள் முகவரி மாற்றம் வெற்றிகரமாக இருப்பதாக உடனடி ஒப்புதலை பெறுவார்கள்.
  • பிறகு ஒன்-ஸ்டாப் முகவரி அறிக்கையிடல் (ஓஸ்கார்ஸ்) முயற்சியில் பங்கேற்கும் அனைத்து பொது நிறுவனங்களின் தரவுத்தளங்களில் புதிய முகவரி ஒரு வேலை நாளுக்குள் புதுப்பிக்கப்படும்.
  • பிறகு விண்ணப்பதாரர்கள் தங்களது புதிய முகவரியை கொண்ட ஸ்டிக்கரை கொண்ட இரண்டாவது தபாலை பெறுவார்கள், மேலும் குறிப்பிடப்படும் அறிவுறுத்தல்களின்படி ஸ்டிக்கரை அவர்களின் அடையாள அட்டையின் பின்புறத்தில் ஒட்டி கொள்ள வேண்டும்.

இந்த புதிய மின் சேவை நான்கு அதிகாரப்பூர்வ மொழிகளில் அதாவது ஆங்கிலம், மாண்டரின், மலாய் மற்றும் தமிழ் கிடைக்கும். ஒரே வீட்டில் வசிக்கும் சிங்கப்பூர் வாசிகள் அனைவரின் விண்ணப்பத்தையும் ஒரே விண்ணப்பத்துடன் புதுப்பிக்கலாம்.

சிங்கப்பூர் வாசிகள் தங்கள் சார்பாக ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க சிங்பாஸ் வைத்திருப்பவர்களாக இருக்கும் பிரதிநிதிகளையும் நியமிக்கலாம். மின் சேவையை அணுக விண்ணப்பதாரரின் அடையாள அட்டை எண்ணையும் அதன் வெளியீட்டு தேதியையும் ப்ராக்ஸிகள் வழங்க வேண்டும். செயல்முறையை முடிக்க, ப்ராக்ஸிகளும் இதேபோல் விண்ணப்பதாரரின் புதிய முகவரிக்கு அனுப்பப்பட்ட PINயை பெற்று உள்ளிட வேண்டும்.

வரும் டிசம்பர் 1, 2020 முதல், NPP கள் மற்றும் NPC களில் முகவரி மாற்றும் சேவையை காவல்துறை நிறுத்திவிடும். ஆன்லைனில் பரிவர்த்தனை செய்ய இயலாத மற்றும் அவர்களுக்கு உதவ ப்ராக்ஸிகள் இல்லாதவர்கள், ICA அலுவலகத்துக்கு செல்லலாம்.

புதிய மின் சேவையை தவறாக பயன்படுத்தினால் அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய பதிவு விதிமுறைகளின் கீழ், தவறான குடியிருப்பு முகவரியை தரும் எவருக்கும் S$3,000 வெள்ளிகள் வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும். புதிய முகவரி ஸ்டிக்கரை அடையாள அட்டையில் இணைக்கவில்லை எனில் அதுவும் ஒரு குற்றமாகும என ICA கூறியுள்ளது.

(Image courtesy: Singpass.gov.sg)