மே 8ம் தேதி முதல் 30ம் தேதி வரை வேலையிடங்களில் பாதுகாப்பு மேலாண்மை விதிகள் இறுக்கப்படுகிறது -MOM

சிங்கப்பூர்: 8 மே முதல் 30 மே வரை, வேலையிடங்களில் பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என மனித வள அமைச்சு (MOM) தெரிவித்துள்ளது.

முதலாளிகள் வேலையிடத்தில் அதிக விழிப்புணர்வை கடைப்பிடிக்க வேண்டும், மேலும் வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் வேலையிடத்தில் 50% க்கும் மிகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

உதாரணமாக, 100 ஊழியர்களை கொண்ட ஒரு நிறுவனத்தில், வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய ஊழியர்களில் 50 பேர் வரை எந்த நேரத்திலும் வேலையிடத்தில் இருக்க முடியும்.

மேலும் வேலையிடங்களில் சமூக கூட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகள் வேலையிடத்தில் அல்லது அதற்கு அருகிலுள்ள பொதுவான இடங்களில் மற்றும் பொது போக்குவரத்து போன்ற பொது இடங்களில் தொடர்பு அளவை குறைத்து அபாயங்களை குறைக்க உதவுகின்றன.

வீட்டிலிருந்து இன்னும் வேலை செய்ய முடியாத ஊழியர்களுக்கு, முதலாளிகள் வேலை செயல்முறைகளை மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

ஊழியர்களுக்கு தேவையான தகவல் தொழில்நுட்ப உபகரணங்களை வழங்க வேண்டும் மற்றும் தொலைதூர வேலை மற்றும் ஆன்லைன் ஒத்துழைப்பை செயல்படுத்தும் தீர்வுகளை பின்பற்ற வேண்டும்.

ஊழியர்கள், பார்வையாளர்கள், சப்ளையர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் உட்பட அனைத்து ஆன்சைட் ஊழியரகளும் வேலையிடத்தில் எல்லா நேரங்களிலும் முகக்கவசம் மற்றும் பிற தேவையான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருப்பதை முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும்.

இதை தவிர தொற்று பரவலை தடுக்க ஏற்கனவே நடைமுறையில் உள்ள பாதுகாப்பு லேலாண்மை நடவடிக்கைகளை சரியாக பின்பற்ற வேண்டும் மனித வள அமைச்சு (MOM) தெரிவித்துள்ளது.

(Image credit: Yahoo)