க்ளார்க் கீ அருகே உள்ள ஆற்றிலிருந்து இரண்டு சடலங்களை SCDF மீட்புக்குழு மீட்டது

சிங்கப்பூர்: SCDFன் பேரிடர் உதவி மற்றும் மீட்பு குழு (DART) டைவர்ஸ் ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை அன்று கிளார்க் கீ சென்ட்ரல் அருகே சிங்கப்பூர் ஆற்றில் இருந்து இரண்டு ஆண்களின் சடலங்களை மீட்டதாக தெரிய வந்துள்ளது.

அதிகாலை 2 மணியளவில் SCDF ன் மீட்பு குழுவுக்கு சம்பவத்தை பற்றிய தகவல் தரப்பட்டதாக தெரிகிறது

SCDFன் பேரிடர் உதவி மற்றும் மீட்பு குழுவிலுள்ள (DART) டைவர்ஸ் நீருக்கடியில் தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் வாகனத்தின் உதவியுடன் தேடலை மேற்கொண்டனர்.

நீருக்கடியில் உள்ள நிலப்பரப்பை காண பயன்படும் சோனார்-இமேஜிங் கருவிகளை பயன்படுத்தி தேடல் நடவடிக்கைகளை நடத்த அந்த வாகனம் உதவுகிறது.

இது நீருக்கடியில் பார்வை குறைவாக இருப்பதால் டைவர்ஸ்களுக்கு ஏற்படும் அபாயங்களை குறைப்பதோடு, மேலும் தேடல் நேரத்தையும் குறைக்கிறது.

(Image source: Rudy Ferragamo FB)

SCDF -DART குழுவின டைவர்ஸ் பின்னர் இரண்டு உடல்களை கண்டுபிடித்து மீட்டனர். SCDF துணை மருத்துவர் ஒருவரால், சோதிக்கப்பட்ட பிறகு அவர்கள் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.