சிங்கப்பூர் விமான நிலையத்தில் ஸ்கூட் விமானம் தரையிறங்கும் நேரத்தில் பயணிகள் சிலர், சீட் பெல்ட் அணிய மறுத்ததால் விமானம் தாமதமாக தரையிறங்கியது..!

சிங்கப்பூர்: ஒரு குழுவாக வந்த பயணிகள் விமானம் இறங்கும் போது சீட் பெல்ட்டைக் அணிய மறுத்தது உட்பட்ட சில நடத்தை காரணமாக,, விமானப் பாதுகாப்பு நலன் கருதி சிங்கப்பூரில் தரையிறுங்குவதை ஸ்கூட் விமானி தாமதப்படுத்தினார்.

விமானி சீட் பெல்ட் அணிய சொல்லி அறிவுறுத்தும் டிக்டாக் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் அணிந்து இருக்கையில் அமர வேண்டும் என விமானி எச்சரித்தார்.

அதன் பிறகு அசம்பாவிதம் இல்லாமல் சாங்கி விமான நிலையத்தில் இரண்டாவது அணுகுமுறையில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது,

மேலும் சம்பந்தப்பட்ட பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைக்காக விமானத்திலிருந்து இறக்கி அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

விமானம் தரையிறங்கும் போது பயணிகளின் பாதுகாப்பிற்காக, அனைத்து பயணிகளும் அமர்ந்திருக்க வேண்டும் மற்றும் புறப்படும் போதும் தரையிறங்கும் போதும் சீட்பெல்ட் அடையாளம் அணைக்கப்படும் வரை பாதுகாப்பாக இருக்க சீட் பெல்ட் அணிய வேண்டும்.

வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் நலனே தங்கள் முன்னுரிமை, மேலும் விமானப் பாதுகாப்பை சமரசம் செய்யும் நடத்தையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஸ்கூட் கூறியது.

வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படக்கூடிய எந்தவொரு பயணிக்கும் எதிராக Scoot தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட இடையூறுகள் மற்றும் சிரமங்களுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கோருவதாகவும் ஸ்கூட் தெரிவித்தது.

(Image credit: Scoot)