சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இந்தியாவுக்கு மருத்துவ பொருட்களை அனுப்பும் பணியில் ஈடுபடுகிறது !!!

இந்தியாவில் அதிகரித்து வரும் கோவிட் -19 தொற்று பாதிப்புகளுக்கு உதவும் முயற்சியாக சிங்கப்பூரில் இருந்து கடந்த சில நாட்களாக விமானங்கள் மூலம் மருத்துவ பொருட்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர் போன்றவை அனுப்பட்டு வருகின்றன.

ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் பைபாப் இயந்திரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ பொருட்களை இந்தியாவுக்கு கொண்டு செல்லும் பணியில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் ஈடுபட்டு வருவதாக SIA நிறுவனம் நேற்று (ஏப்ரல்.30) தெரிவித்தது.

அமேசான் இந்தியா நியூஸ், தேமாசெக் மற்றும் தேமாசெக் அறக்கட்டளை ஆகிய கூட்டாளர்களுடன் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இணைந்து இந்த பணியை செய்வதாக கூறியுள்ளது.

இந்த பொருட்கள் தற்போது உள்நாட்டில் குறைவாகவே உள்ளதாகவும், அவற்றை பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களுக்கு அனுப்பப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை சி -17 ஏ குளோப்மாஸ்டர் III சிங்கப்பூரிலிருந்து 4 கிரையோஜெனிக் திரவ ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விமானத்தில் நேற்று (ஏப்ரல்.30) ஏற்றி சென்றதாக இந்திய தூதரகம் தெரிவித்தது. இது அதானி குழுமத்திற்கும் WKS இன்டஸ்டரியல் கேஸ் நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இது அனுப்பப்பட்டது.

அதானி நிறுவனத்தின் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்

மேலும் கிரையோஜெனிக் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை நான்காவது தவணை நேற்று(ஏப்ரல்.30) இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் அனுப்பப்பட்டதாக சிங்கப்பூரிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

டாடா குழுமத்திற்கும் லிண்டே கேஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையிலான கொள்முதல் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஏப்ரல் 24, 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணை அனுப்பட்டது.