சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் A380 விமானத்திற்கு சென்று உலக தரம் வாய்ந்த உணவு சாப்பிட்டு வரலாம், அல்லது வீட்டிற்கே உணவை வரவழைக்கலாம், SIA புது திட்டம்

கோவிட் பாதிப்பால் விமானங்கள் இயக்கப்படாததால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் செவ்வாயன்று (செப்.29) புதிய திட்டங்களை வெளியிட்டது.

முன்னதாக சாங்கி விமான நிலையத்தில் புறப்பட்டு சாங்கி விமான நிலையத்திலேயே வந்திறங்கும் திட்டத்தை தொடங்கவுள்ளதாக சொல்லப்பட்டது.

இப்போது மூன்று புதிய திட்டங்களை SIA அறிவித்துள்ளது. அதில் ஒன்று, சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் A380 விமானத்தில் அமர்ந்து உணவருந்தும் திட்டமாகும். இது அக்டோபர் 24 மற்றும் 25 தேதிகளில் மட்டும் நடக்கும்என்றும் இதற்கான அனுமதி சீட்டுகள் Krisshop.com ல் அக்டோபர் 12 முதல் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

இரண்டாவதாக SIA பயிற்சி மையத்துக்கு சென்று பார்வையிட அனுமதிக்கபடும் திட்டம். 21, 22 நவம்பர் மற்றும் 28,29 நவம்பர் ஆகிய இரு வார இறுதி நாட்களில் மட்டும் இதற்கு அனுமதிக்கப்படும். இதற்கான அனுமதி சீட்டுகள் Krisshop.com ல் நவம்பர் 1 முதல் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

மூன்றாவதாக உலக தரம் வாய்ந்த சமையல் நிபுணர்களால் தயார் செய்யப்பட்ட இரு நபர்களுக்கான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உணவை வீட்டிற்கே வரவழைத்து சாப்பிடலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த சேவை அக்டோபர் 4 முதல் Krisshop.comல் கிடைக்கும் என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தன்னுடைய இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்த புதிய திட்டங்கள் அறிவிப்பினால் முன்பு அறிவிக்கப்பட்ட சிங்கப்பூரில் புறப்பட்டு சிங்கப்பூரிலேயே தரையிறங்கும் பயண திட்டம் தொடங்கப்படாது என தெரிகிறது.