சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு விமான சேவைகளை அதிகரிக்க உள்ளது..!!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் உள்ள இடங்களுக்கு விமானங்களை அதிகரித்து வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்ய உள்ளதாக நேற்று (நவம்பர்.22) தெரிவித்துள்ளது.

இதில் ஆஸ்திரேலியாவிற்கான ஏர்பஸ் A380 சேவைகள் அதன் வடக்கு கோடை இயக்க காலத்தில் (26 மார்ச் முதல் 29 அக்டோபர் 2023 வரை) இயக்கப்படும் விமானங்களும் அடங்கும்.

தாய்லாந்தில் உள்ள பாங்காக், தென் கொரியாவில் பூசன் மற்றும் சியோல், ஜப்பானில் புகுவோகா, நகோயா மற்றும் ஒசாகா; வியட்நாமில் ஹோ சி மின் நகரம்; மலேசியாவில் கோலாலம்பூர், கம்போடியாவில் சீம் ரீப் மற்றும் தைவானில் உள்ள தைபே உள்ளிட்ட கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இடங்களுக்கு விமானங்கள் அதிகரிக்கப்பட உள்ளன.

மேலும், ஆஸ்திரேலியாவில், மெல்போர்னுக்கு புதிய தினசரி ஏர்பஸ் ஏ380 சேவையையும், சிட்னிக்கு இரண்டாவது தினசரி ஏ380 சேவையும் தொடங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 16 மே 2023 அன்று A380 மெல்போர்னுக்கு சேவையை தொடங்கும், அதே நேரத்தில் சிட்னிக்கு 17 மே 2023ல் இருந்து இரண்டாவது தினசரி A380 சேவை தொடங்கப்படும். 777-300ER விமானங்களுக்கு மாற்றாக A380 விமானங்கள் இயக்கப்படும் என்று SIA தெரிவித்துள்ளது.

(Image article credit: Yahoo)

.