சிங்கப்பூர், இங்கு பணிபுரியும் வெளிநாட்டவர்களை புறக்கணிக்க கூடாது, தேசிய தின உரையில் பிரதமர் லீ

சிங்கப்பூர் இங்கு பணிபுரியும் பல வெளிநாட்டவர்கள் தேசத்திற்கு பங்களித்து, சிங்கப்பூரை வலுப்படுத்தியவர்கள் என்பதால் அவர்களை புறகணிக்கக்கூடாது என்று பிரதமர் லீ சியன் லூங் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 29) தன்னுடைய தேசிய தின உரையின் போது கூறினார்.

வெளிநாட்டினர் நமது சகாக்கள், நமது அண்டை வீட்டினர் மற்றும் நமது நண்பர்களாவார்கள். கோவிட் -19ன் போது, அவர்கள் சிலர் தனிப்பட்ட கஷ்டங்களை அனுபவித்திருக்கலாம், ஒரு வேளை வெளிநாட்டில் இருக்கும் குடும்பங்களிலிருந்து பிரிந்திருக்கலாம், அல்லது சிங்கப்பூருக்கு வெளியே சிக்கி, இங்கு வீடு திரும்ப இயலாமல் இருக்கலாம்.

சிங்கப்பூர், மக்கள் வெளிநாட்டினருக்கு விரோதமாகி வருகிறார்கள் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டாம், ஏனெனில் இது, சர்வதேச வணிக மையம் என்ற சிங்கப்பூரின் நற்பெயரை கடுமையாக சேதப்படுத்தும், மேலும் முதலீடுகள், வேலைகள் மற்றும் வாய்ப்புகள் இழப்புக்கு வழிவகுக்கும் என பிரதமர் குறிப்பிட்டார்.

நமக்கான ஒரு வாழ்க்கையை சம்பாதிப்பதற்காக திறந்த நிலையில் சிங்கப்பூர் இருப்பதை, உலகிற்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

சிங்கப்பூரர்கள் யோசனைகள் மற்றும் திறமைகளை வரவேற்கவும், அத்துடன் போட்டி மற்றும் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரர் மற்றும் வெளிநாட்டினர் இருவருமே நல்லிணக்கத்தோடு இருக்க வேண்டும். வெளியாட்டினரும் சிங்கப்பூர் வாழ்க்கை முறையை புரிந்து அதற்கேற்றார் போல் இருக்க வேண்டும் என்பதையும் பிரதமர் குறிப்பிட்டார்.

(Image credit: PM LEE FB)