சிங்கப்பூர் விமானப்படை விமானங்கள், 256 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு இந்தியாவுக்கு புறப்பட்டன !!!

சிங்கப்பூர்:இன்று (ஏப்ரல்.28) காலை, இரண்டு சிங்கப்பூர் விமானப்படை விமானங்கள் சிங்கப்பூரிலிருந்து 256 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை இந்தியாவுக்கு எடுத்து சென்றன.

இந்த கடினமான நேரத்தில் இந்தியாவுக்கு மனிதாபிமான நிவாரணம் வழங்க இது சிங்கப்பூரின் பங்களிப்பு என்று வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பாயா லேபர் விமான தளத்தில் இருந்து சிங்கப்பூரின் இரண்டு C-130 விமானங்கள் இந்தியாவுக்கு புறப்பட்டன.

விமானத்தில் ஏற்றப்பட்ட ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்

இரண்டாவது அமைச்சர் டாக்டர் மாலிகி ஒஸ்மான் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை சிங்கப்பூருக்கான இந்திய தூதர் பி குமாரனிடம் ஒப்படைத்தார்.

இந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இந்தியாவில் உள்ள கோவிட் நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொற்று நோய் பாதிப்பால் ஏற்படும் சவால்களை எதிர்த்து இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளுடன் சிங்கப்பூர் தொடர்ந்து பணியாற்றும் என கூறப்பட்டுள்ளது.