பிரத்யேக தங்கும் வசதியின் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததற்காக சிங்கப்பூர் இளைஞர் ஒருவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது – ICA

பிரத்யேக தங்கும் வசதியில் SHN ல் உள்ளவருக்கு உடந்தையாய் இருந்து தங்கும் ஆணை தேவைகளை மீறியதற்காகவும் மற்றும் பிரத்யேக தங்கும் வசதியின் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததற்காவும் 20 வயதான சிங்கப்பூரரான சோ கைசர் மீது நேற்று( ஜூன்.18) அன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டதாக சிங்கப்பூர் குடியுரிமை ஆணையம்(ICA) தெரிவித்துள்ளது.

நவம்பர் 28, 2020 அன்று பிற்பகல் 3.00 மணியளவில், ஒரு ஹோட்டலில் SHNல் இருந்த தனது நண்பரை சோவ் பார்வையிட்டார். சோவ் ஒரு லிப்ட் எடுத்து SHNல் ஆணையில் தனது பெண் நண்பர் தங்கியிருந்த ஹோட்டலின் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்தார்.

பின்னர் சோவ் ஹோட்டலின் பாதுகாப்பு காவலரால் கண்டுபிடிக்கப்பட்டார், ஆனால் அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு ஹோட்டலின் வளாகத்தை விட்டு வெளியேறி விட்டார்.

தங்கும் ஆணை தேவைகளுக்கு இணங்க தவறியவர்கள் மீது தொற்று நோய்கள் விதிமுறைகள் 2020 இன் கீழ் வழக்குத் தொடரப்படுவார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டால் S$10,000 வரை அபராதம் மற்றும் / அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

கூடுதலாக, தண்டனை சட்டத்தின் பிரிவு 447 ன் கீழ் அத்துமீறல் குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனையோ அல்லது S$1,500 வெள்ளிகள் வரை அபராதமோ அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று ICA தெரிவித்துள்ளது.

(Image credit: Yahoo)