சிங்கப்பூரில் உள்ள தனியார் க்ளினிக் ஒன்று, சினோபார்ம் கோவிட் தடுப்பூசியை இறக்குமதி செய்ய அனுமதி பெற்றுள்ளது….!

சிங்கப்பூர்: சிறப்பு அணுகல் வழியில் (SAR) சினோபார்ம் கோவிட் -19 தடுப்பூசியை இறக்குமதி செய்ய சுகாதார அறிவியல் ஆணையத்தின் (HSA) ஒப்புதலை பெற்றுள்ளதாக சிங்கப்பூரில் உள்ள IHH ஹெலத்கேர் குழுமம் தெரிவித்துள்ளது.

இது சிங்கப்பூரில் உள்ளவர்களுக்கு மற்றொரு மாற்று தடுப்பூசி போட்டு கொள்ளும் வாய்ப்பை வழங்கும் என கூறப்பட்டுள்ளது. இது பற்றிய கூடுதல் விவரங்கள் வி்ரைவில் அறிவிக்கப்படும் என்று IHH ஹெல்த்கேர் குழுமம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் தனியார் க்ளினிக்குகளில் நிர்வகிக்கப்படும் இது போன்ற தடுப்பூசிகளுக்கு பிறகு பக்க விளைவுகள் அல்லது உயிரழப்பு ஏற்பட்டால் அரசு நிதி உதவி பெற முடியாது என ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் அவசர கால பயன்பாட்டிற்காக பைசர், மாடர்னா ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கும் சுகாதார அறிவியல் ஆணையம்(HSA) அனுமதி அளித்துள்ளது.

இருப்பினும் உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) அனுமதிக்கப்பட்ட தடுப்பூசி மட்டுமே சிங்கப்பூரில் தனியார் க்ளினிக்குகளில் நிர்வகிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

ஏற்கனவே சிங்கப்பூரில் சினோவாக் என்ற தடுப்பூசி அனுமதி வழங்கப்பட்ட சில தனியார் க்ளினிக்குகளில் போடப்படுகிறது.

சினோவாக் தடுப்பூசிக்கு சிறிய கட்டணம் வசூலிக்கப்படுவது போலவே சினோபார்ம் தடுப்பூசிக்கும் கட்டணம் வசூலிக்கப்படலாம். சுகாதார அமைச்சகம் (MOH) இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவலை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Image credit: Reuters)