ஆறு புதிய TEL ரயில் நிலையங்களின் சோதனை மற்றும் கட்டமைப்பு பணிகள் முடிந்தன, மூன்றாம் காலாண்டில் சேவை தொடங்கும் !!!

சிங்கப்பூர்: ஆறு புதிய TEL (Thomson – East coast Line) ரயில் நிலையங்களுக்கான சிவில் மற்றும் கட்டமைப்பு பணிகளை பூர்த்தி செய்து அந்த ரயில் நிலையங்களை SMRT நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளதாக நில போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது.

ஸ்ப்ரிங்லீப், லெண்டர், மேப்ளவர், பிரைட் ஹில், அப்பர் தாம்சன் மற்றும் கால்டெகாட் ஆகிய இரண்டாம் கட்ட TEL புதிய நிலையங்கள் முதல் கட்ட TEL ரயில் நிலையங்களுடன் தடையின்றி இயங்குவதை உறுதி செய்வதற்கான சோதனைகள் உட்பட ரயில்கள் மற்றும் அமைப்புகளின் சோதனை மற்றும் ஆணையிடுதலும்(commissioning) நிறைவடைந்துள்ளது.

முழு சோதனைகளும் முடிந்த பிறகு இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இந்த புதிய TEL நிலையங்களுக்கிடையேயான சேவை தொடங்கப்படும் என LTA கூறியுள்ளது.

TEL தடத்தில் உள்ள ரயில் நிலையங்கள்

ரயில் அமைப்புகள் செயல்பாடுகளுக்கு தயாராக உள்ளன என்பதை மேலும் உறுதிப்படுத்த, கூடுதல் சோதனைகளை தொடர இந்த நிலையங்களை SMRT க்கு ஒப்படைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையங்கள் சேவையை தொடங்கும் போது சில இடங்களுக்கு செல்லும்போது பயணியின் பயண நேரத்தை பாதியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, ரிபப்ளிக் பாலிடெக்னிக் செல்ல பொது போக்குவரத்து மூலம் பயணிக்கும் ஒரு சின் மிங் குடியிருப்பாளர் தற்போதைய 50 நிமிட பயண நேரத்திலிருந்து 25 நிமிடங்களை சேமிக்க முடியும்.

மேலும் சோதனைகளை நடத்துவதற்கும், 2021 ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் TEL2 ரயில் சேவை செயல்பாட்டிற்கு தயாராக இருப்பதை உறுதி செய்வதற்கும் தொடர்ந்து LTA, SMRT நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் என கூறப்பட்டுள்ளது.

(Image source: LTA)