கோவிட் பாதித்த நபர்கள் சென்ற இடங்களுக்கு அதே நாளில் சென்றவர்களுக்கு SMS அனுப்பப்படும், அவர்கள் கட்டாய சோதனைக்கு உட்பட வேண்டும் !!!

சிங்கப்பூர்: கோவிட் பாதித்த நபர்கள் பார்வையிட்ட இடங்களுக்கு அதே நாளில் சென்ற நபர்களுக்கு SMS மூலம் ‘ஹெல்த் அலர்ட்ஸ்’ அனுப்பப்படும் என்று என்று சுகாதார அமைச்சகம்(MOH) தெரிவித்துள்ளது.

வைரஸ் மாறுபாடுகளின் பரவும் தன்மை அதிகரித்துள்ளதால் பெரிய கிளஸ்டர்கள் உருவாவதை தடுக்க டிரேஸ்டுகெதர் மற்றும் சேப்என்ட்ரி தரவு பயன்படுத்தப்படும் என்று MOH தெரிவித்துள்ளது.

இது பரவலை தடுக்க உதவுவதோடு மேலும் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க அதிக நம்பிக்கையை வழங்கும் என கூறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர்கள் சென்ற இடங்களுக்கு, அதே நாட்களில் சென்ற நபர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதால் குறுந்தகவல் (SMS) வழியாக ‘ஹெல்த் அலர்ட்ஸ்’ அனுப்பப்படும்.

SMS பெறும் நபர்கள் நியமிக்கப்பட்ட சோதனை மையங்களில் கட்டாய சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் மற்றும் அவர்கள் முடிவுகளை பெறும் வரை தனிமைப்படுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

சோதனை மையங்களில், இந்த நபர்களுக்கு நாங்கள் DIY சோதனை கருவிகளையும் கொடுப்போம், அவை அடுத்தடுத்த நாட்களில் அவர்கள் நோய்த்தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த அவர்கள் வீட்டில் சுயமாக சோதித்துக்கொள்ள வேண்டும் என MOH கூறியுள்ளது.