சிங்கப்பூரில் சமூக கோவிட் தொற்றுகள் அதிகரித்ததின் விளைவாக, ஒன்று கூடும் அளவு 5 ஆக குறைக்கப்படுகிறது !!!

சிங்கப்பூர்: சமூக கோவிட் தொற்றுகள் சற்றே அதிகரித்து வருவதால் சுகாதார அமைச்சகம்(MOH) கூடுதல் பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகள் இன்று (மே.4) அறிவித்துள்ளது.

மே 8 முதல் 2021 மே 30 வரை இந்த விதிகள் நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

8 பேர் வரை தற்போது அனுமதிக்கப்பட்ட குழு அளவு 5 நபர்களாக குறைக்கப்படும் என MOH தெரிவித்துள்ளது.

30 ஏப்ரல் அன்று அறிவித்தபடி, தனி நபர்கள் ஒரு நாளைக்கு 2 அல்லது அதற்கும் குறைவான சந்திப்புகளுக்குள் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேறொரு வீட்டிற்கு சென்றாலும் அல்லது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு பொது இடத்தில் சந்தித்தாலும் இந்த அளவு பொருந்தும்.

மேலும் ஒரு நாளைக்கு ஒரு வீட்டுக்கு 8 தனி பார்வையாளர்களின் வரம்பு ஒரு நாளைக்கு ஒரு வீட்டுக்கு 5 பார்வையாளர்களாக குறைக்கப்படும் என MOH கூறியுள்ளது.

(Image credit: MCCY)