சிங்கப்பூரில் தற்போது அமலில் உள்ள பாதுகாப்பு மேலாண்மை விதிகள் 25 அக்டோபர் முதல் 21 நவம்பர் வரை நீட்டிக்கப்படுகிறது …!!!

சிங்கப்பூர : சுகாதார அமைப்பில் நிலவும் தொடர்ச்சியான அழுத்தங்களை கருத்தில் கொண்டு, கோவிட் நிலைமையை மேலும் நிலைப்படுத்த அதிக நேரம் தேவைப்படுவதால், தற்போதைய கட்டுப்பாடுகளை 25 அக்டோபர் முதல் 21 நவம்பர் 2021 வரை நீட்டிப்பதாக கோவிட்டுக்கான அமைச்சர்கள் குழு தெரிவித்துள்ளது.

கோவிட் பரவல் விகிதத்தை குறைக்கவும் மற்றும் சுகாதார அமைப்பில் ஏற்படும் அழுத்தத்தை எளிதாக்கவும் கடந்த 27 செப்டம்பர் அன்று சிங்கப்பூர் கோவிட் நிலைமையை நிலைப்படுத்தும் கட்டத்தில் நுழைந்தது. முந்தைய அறிவிப்பில் பாதுகாப்பு மேலாண்மை விதிகள் அக்டோபர் 24 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த நான்கு வாரங்களில், அதிக கோவிட்-19 சிகிச்சை வசதிகளை (CTF) அமைத்து, வீட்டில் குணமடைதல் திட்டத்தில் (HRP) மேம்பாடுகளை செய்துள்ளதாக MOH கூறியுள்ளது. மேலும் லேசான அல்லது அறிகுறி இல்லாத நபர்களை ஆரம்பத்திலேயே தனிமைப்படுத்தி வீட்டிலேயே குணமடைய அனுமதித்து, சுகாதார நெறிமுறைகளை எளிமைப்படுத்தியுள்ளதாகவும் MOH தெரிவித்துள்ளது.

நிலைப்படுத்தல் நடவடிக்கைகள் பரவும் வீதத்தை தணிக்க உதவியது. இருப்பினும், தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, மேலும் பல பாதிக்கப்படக்கூடிய நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை பிரிவு (ICU) பராமரிப்பு தேவைப்படுவதை பார்க்க முடிவதாக கூறப்பட்டுள்ளது.

தொற்றுகள் அதிகரித்துள்ளதால், பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை வசதிகளில் அனுமதிக்கப்படுவதையும் அதிகரித்துள்ளது. மிகவும் கடுமையான அறிகுறிகள் அல்லது நோய்கள் காரணமாக சமூக மருத்துவமனைகள் அல்லது சிகிச்சை வசதிகளில் (CTF) அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதை கருத்தில் கொண்டு நிலைப்படுத்தல் கட்டத்தை 25 அக்டோபர் முதல் 21 நவம்பர் 2021 வரை விரிவுபடுத்துவதாக கூறப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்து, பின்னர் சமூக சூழ்நிலையின் அடிப்படையில் அவற்றை சரி செய்யப்படும் என்று கோவிட்டுக்கான அமைச்சர்கள் குழு தெரிவித்துள்ளது.

(Image credit: Yahoo)