வேலைவாய்ப்பு மற்றும் குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களின் நலன்களில் கவனம் செலுத்தப்படும் !!!

சிங்கப்பூர்: மனிதவள அமைச்சகத்தை முழு் பொறுப்பையும் ஏற்கவிருக்கும் டான் சிங் லெங், வேலைவாய்ப்பு, குறைந்த ஊதிய் பெறுவோரின் நலன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தன் முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

டான் சிங் லெங் தற்போது MOMன் இணை அமைச்சராக உள்ளார். கடந்த 9 மாதங்களாக, மனிதவள பிரச்சினைகள் குறித்து நான் அமைச்சர் ஜோசபின் டீயுடன் மிக நெருக்கமாக பணியாற்றி வந்துள்ளார்.

தங்குமிடங்களில் உள்ள பொது சுகாதார நிலைமையை நிர்வகிப்பதில், நமது புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாப்பதிலும் பராமரிப்பதிலும் நாங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு உன்னிப்பாக கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரர்களுக்கு வேலை தேடுபவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்புக்கு உதவுவது, இந்த புதிய இயல்பான சூழலில் தொழிலாளர்கள் அனைவரின் மன நலனையும் கவனித்துக்கொள்வது. வேலை ஏற்பாடுகள், மற்றும் முக்கியமாக, குறைந்த ஊதிய தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்துதல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்

எதிர்வரும் மாதங்களில் செய்ய வேண்டியது நிறைய உள்ளது, மேலும் மூத்த அமைச்சர். ஜாகி மொஹமட், மூத்த அமைச்சர் டாக்டர் கோ போ கூன், MOS கன் சியோ ஹுவாங் மற்றும் என்னுடன் பணிபுரியும் முழு MOM குழுவுடன தொடர்ந்து பணிபுரிவது அதிர்ஷடவசமானது என்று அமைச்சர் கூறியுள்ளார்.