அக்டோபர் 27 முதல் இந்தியா உட்பட சில ஆசிய நாடுகளில் இருந்து பயணிகள் சிங்கப்பூர் வர அனுமதிக்கப்படுவார்கள் !!!

சிங்கப்பூர்: அக்டோபர் 27ம் தேதி முதல் இந்தியா உட்பட சில ஆசிய நாடுகளில் இருந்து பயணிகள் சிங்கப்பூர் உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என கோவிட்டுக்கான அமைச்சர்கள் குழு இன்று (அக்.23) அறிவித்துள்ளது.

வங்காளதேசம், இந்தியா, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு 14 நாள் பயண வரலாற்றை கொண்ட அனைத்துப் பயணிகளும் சிங்கப்பூர் வழியாக உள்ளே நுழையவோ அல்லது செல்லவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது..

இந்த நாடுகளில் உள்ள கோவிட் -19 நிலைமை மதிப்பாய்வு செய்யப்பட்டு சிங்கப்பூரின் எல்லை கட்டுப்பாட்டு விதிகளில் இப்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

26 அக்டோபர், 2359 மணி முதல் சிங்கப்பூர் புறப்படுவதற்கு முன்பு வங்காளதேசம், இந்தியா, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு 14 நாள் பயண வரலாற்றைக் கொண்ட அனைத்து பயணிகளும் சிங்கப்பூர் வழியாக உள்ளே நுழைந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் வகை IV எல்லை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. வகை IV நாடுகளில் இருந்து வரும் பயணிகள், பிரத்யேக SHN வசதிகளில் 10 நாட்கள் தங்கும் அறிவிப்பு (SHN) சேவை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

வகை II (தடுப்பூசி போடாத பயண பாதை (VTL)), வகை III மற்றும் IV நாடுகளைச சேர்ந்த அனைத்துப் பயணிகளும் இனி சிங்கப்பூர் வந்த பிறகு PCR சோதனைக்கு உட்பட வேண்டியதில்லை, தங்கும் அறிவிப்பு( SHN) முடிந்த பிறகு மட்டுமே PCR சோதனை செய்து வெளியேற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.