சிங்கப்பூரில் பழைய ட்ரேஸ்டுகெதர் டோக்கன்களை விற்பனை இயந்திரங்களில் (Vending Machine) மாற்றி கொள்ளலாம்…!!

சிங்கப்பூர்: பழுதான பழைய ட்ரேஸ்டுகெதர் டோக்கன்களை விற்பனை இயந்திரங்களில் (Vending machine) பெற ஸ்மார்நேஷன் அரசு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

உணவு, பானங்கள் அல்லது இலவச முகக்கவசங்கள் ஆகியவற்றை விற்பனை இயந்திரங்களில்(Vending Machine) கிடைப்பதை அனைவரும் பார்த்திருக்கலாம். ட்ரேஸ்டுகெதர் டோக்கன்களும் அவ்வாறு விற்பனை இயந்திரங்களில் கிடைக்க உள்ளன.

முகக்கவசங்கள் வழங்க பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களை டோக்கன்கள் கிடைக்க செய்ய ஸ்மார்ட்நேஷன் அரசு நிறுவனம் டெமாசெக் அறக்கட்டளையுடன் இணைந்து செயல்படுவதாக கூறியுள்ளது.

இதன் மூலம் பொது மக்கள் ட்ரேஸ்டுகெதர் டோக்கன்களை எளிதாக மாற்றிக்கொள்ளலாம். 26 ஜூலை 2021 முதல் நெக்ஸ் மற்றும் சன் பிளாசாவில் இந்த இயந்திரங்களை பார்க்கலாம்.

பழைய டோக்கனையும், அடையாள குறியீடு (Barcode) உள்ள அடையாள அட்டையையும் டோக்கனை மாற்ற எடுத்து செல்ல வேண்டும். 4 மாதங்களுக்கு முன்பு பெற்ற அல்லது மாற்றிய டோக்கனை மட்டுமே இந்த இயந்திரங்களில் மாற்ற முடியும்.

4 மாத காலத்திற்குள் பெற்ற அல்லது மாற்றிய டோக்கன்களை சமூக மன்றங்களுக்கு சென்று மாற்றி கொள்ளலாம். இந்த விற்பனை இயந்திரங்களை வரவிருக்கும் மாதங்களில் அதிக இடங்களில் நிறுவப்படலாம் என தெரிகிறது.

(Image source: Smart Nation)