கட்டுமான பணிகள் நடந்துவரும் Notth South Corridor சாலை பற்றி போக்குவரத்து அமைச்சர் விளக்கம்

சிங்கப்பூர்: Notth South Corridor நெடுஞ்சாலை மற்றும் அதன் கட்டுமானம் பற்றி போக்குவரத்து துறை அமைச்சர் ஆங் யீ கங்க் விளக்கம் அளித்துள்ளார்

Notth South Corridor கட்டுமான பணிகளை சிலர் பார்த்திருக்கலாம். NSC என்பது என்னவென்று போக்குவரத்து அமைச்சர சிறு விளக்கத்தை தன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

NSC – சாலை இந்த இடங்கள் வழியாக இருக்கும்

சிங்கப்பூரின் வடக்கு பகுதியை சிபிடியுடன் இணைக்கும் ஒரே அதிவேக நெடுஞ்சாலையாக இப்போது CTE உள்ளது. NSC இரண்டாவது இணைப்பை வழங்குகிறது.

இது உட்லேண்ட்ஸ், செம்பவாங், பிஷான் வழியாக புக்கிட் திமா மற்றும் சிபிடி வரை செல்கிறது. இந்த சாலை கட்டுமான பணிகளுக்காக தாம்ஸன் சாலையில் உள்ள கட்டிடத்தை அரசாங்கம் கையகபடுத்தியுள்ளது.

இது சுரங்கப்பாதைகளை் கொண்டது, அதாவது தாம்சன் சாலை மற்றும் மேரிமவுண்ட் சாலை போன்ற முக்கிய மேற்பரப்பு சாலைகள் பேருந்துகளுக்கான பிரத்யேக பாதைகள், பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான பாதைகள், பசுமை மற்றும் சமூக இடங்கள் உள்ளிட்ட பிற பயன்பாடுகளுக்கு விடுவிக்கப்படலாம்.

2027 ம் ஆண்டில் NSC நிறைவடையும் என எதிர்பார்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

(Image source: LTA )