சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், நவம்பர் 1 முதல் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்..!!

சிங்கப்பூர்: கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக விமான நிலைய கட்டண அதிகரிப்புகள் இரண்டு வருடங்கள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சாங்கி விமான நிலையத்திலிருந்து வெளியேறும் பயணிகள் நவம்பர் 1 முதல் விமானக் கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக CAAS மற்றும் CAG கூட்டாக அறிவித்துள்ளன

சிங்கப்பூரிலிருந்து புறப்படும் பயணிகள் மொத்தமாக s$59.20 அல்லது தற்போது உள்ள s$52.30ல் இருந்து s$6.90 அதிகமாகச் செலுத்த வேண்டும். பயணிகள் சேவை மற்றும் பாதுகாப்புக் கட்டணம் s$35.40ல் இருந்து s$40.40 ஆகவும் உயர்த்தப்பட்டதாலும், விமானப் போக்குவரத்து வரி s$6.10ல் இருந்து s$8 ஆகவும் அதிகரித்ததன் காரணமாகவும் ஒட்டுமொத்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

நவம்பர் 1 ம் தேதிக்கு முன் விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட்ட பயணிகள் அதிக கட்டணம் மற்றும் வரியை செலுத்த தேவையில்லை என்று சிங்கப்பூர் சிவில் ஏவியேஷன் ஆணையம் (CAAS) மற்றும் சாங்கி ஏர்போர்ட் குழுமம் (CAG) நேற்று (செப்டம்பர் 15) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

(நவம்பர் 1, 2022 முதல் சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் செலுத்த வேண்டிய கட்டணங்களின் அட்டவணை)

சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்படுபவர்களுக்கான பயணிகள் சேவை மற்றும் பாதுகாப்பு கட்டணம் 1 ஏப்ரல் 2020 முதல் s$35.40 ஆக உள்ளது.

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, 2018 ல் அறிவிக்கப்பட்டபடி $37.90 ஆகவும், 2022ல் $40.40 ஆகவும் திட்டமிடப்பட்ட கட்டண உயர்வு அமல்படுத்தப்படாமல் இடைநிறுத்தப்பட்டது,

விமான நிலையத்தின் அதிக செயல்பாட்டுச் செலவை ஈடுகட்ட நவம்பர் 1 அதிகரிப்பிற்கு பிறகு, 1 ஏப்ரல் 2023 அன்று. S$43.40 ஆகவும், ஏப்ரல் 1, 2024 அன்று S$46.40 ஆகவும் கட்டணம் உயரும்.

நவம்பர் 1 முதல் மார்ச் 31, 2025 வரை விமானப் போக்குவரத்து வரியானது S$8 ஆக மாறாமல் இருக்கும், நவம்பர் 1 அன்று வரி அதிகரிப்பு அதன் முதல் சரி செய்தலைக் குறிக்கும், இது 13 ஆண்டுகளுக்கு முன்பு 2009 ல் S$6.10 ஆக அறிமுகப்படுத்தப்பட்டது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாங்கி விமான நிலையத்திற்கு வரும் பயணிகளும், மற்றும் விமானம் மாறும் பயணிகளும் கட்டணம் செலுத்த தேவையில்லை. தற்போதைய விமான நிலைய மேம்பாட்டு வரியான S$10.80, 31 மார்ச் 2025 வரை மாறாமல் இருக்கும்.

சாங்கி விமான நிலையத்தில் இயங்கும் அனைத்து விமானங்களுக்கான தரையிறக்கம், நிறுத்தம் மற்றும் ஏரோபிரிட்ஜ் கட்டணம் நவம்பர் 1 ம் தேதி முதல் இரண்டு சதவீதம் அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முன்னர் அறிவித்தபடி, ஒவ்வொரு ஆண்டும் 1 ஏப்ரல் 2023 மற்றும் 1 ஏப்ரல் 2024 அன்று மேலும் ஒரு சதவீதம் அதிகரிக்கும்.

அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வுகளால் நவம்பர் 1க் பிறகு சிங்கப்பூரில் இருந்து புறப்படும் பயணிகளின் பயண சீட்டுகளின் விலையை அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.