விடாது பெய்த கன மழையால் இரண்டு இடங்களில், வாகனங்கள் மீது விழுந்த மரங்கள் !!!

நேற்று, சனிக்கிழமை (ஏப்ரல்.17) அன்று பலத்த மழை, வெள்ளம் காரணமாக சிங்கப்பூரில் சில இடங்களில் மரங்கள், வாகனங்கள் மீது விழுந்த சம்பவங்கள் நடந்துள்ளது

ப்ளாக் 166 புக்கிட் படோக் வெஸ்ட் அவென்யூ 8, திறந்த கார் பார்க்கில் மரங்கள் நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்கள் மீது விழுந்தன.

கார் பார்க்கில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் என்பதால் உள்ளே யாரும் இருந்திருக்க மாட்டார்கள் என நம்பப்படுகிறது.

ப்ளாக் 166 புக்கிட் பாட்டோக் கார் பார்க்

ஆனால் மரங்கள் விழுந்திருக்கும் புகைப்படங்களை பார்க்கும் போது கனமான மரங்கள் போலவும், வாகனங்களை கடுமையாக சேதப்படுத்தியிருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

நேற்று மதியம் 2.45 மணியளவில் லோயர் டெல்டா சாலையில் ஒரு காரின் மீது மரம் விழுந்த சம்பவம் நடந்துள்ளது. Road.sg முகநூல் பக்கத்தில் வேறொரு ஒட்டுநரால் எடுக்கப்பட்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவை இந்த இணைப்பில் பார்க்கலாம்.

இந்த கார் சாலையில் சென்ற போது, மரம் விழுந்திருக்கும் என்பதால் நிச்சயமாக கார் உள்ளே யாராவது இருந்திருக்க வேண்டும். உள்ளே இருந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டதா என்பது தெரியவில்லை.

(Image/Video credit: Road.Sg)