சிங்கப்பூரில் மே 17ம் தேதி முதல் மொபைல் கேமராவில் ஸ்கேன் செய்து உள்ளே நுழைய முடியாது !!!

சிங்கப்பூர்: ட்ரேஸ்டுகெதர் டோக்கன் அல்லது செயலி மட்டும் பயன்படுத்தி உள்ளே நுழைய அனுமதிப்பது வரும் 17 மே முதல் அமல்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சகம்(MOH) தெரிவித்துள்ளது

17 மே 2021 முதல், தொலைபேசி கேமரா மற்றும் சிங்க்பாஸ் செயலி மூலம் SE-QR குறியீடுகளை ஸ்கேன் செய்வது நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைக்கு மாறுவதை எளிதாக்க, அடையாள அட்டை பயன்படுத்தி செக்-இன் செய்வது மே 31 வரை அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக 1 ஜூன் 2021 முதல், ட்ரேஸ்டுகெதர் டோக்கன் அல்லது செயலியை பயன்படுத்தி மட்டுமே அதிக ஆபத்து உள்ள இடங்களுக்கு செல்லலாம் சில நாட்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேதி இப்போது மாற்றப்பட்டுள்ளது.

மேலும் ஏப்ரல் 19 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் பாதுகாப்பான நுழைவாயில் (SafeEntry Gateway) சாதனங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தேவையை விடுதி, உணவு & பானம் விற்பனை நிலையங்கள் மற்றும் விளையாட்டு, உடற்பயிற்சி மையங்கள் போன்றவை.களும் ஜூன் 15க்குள் செயல்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது

இன்றைய தேதி வரை, 90% க்கும் அதிகமான மக்கள் ட்ரேஸ்டுகெதர் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர் அல்லது ட்ரேஸ்டுகெதர் டோக்கனை பெற்றுள்ளனர் என MOH தெரிவித்துள்ளது.

(Image source: Yahoo)