சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இரண்டு தடுப்பூசி மையங்கள் !!!

சிங்கப்பூர்: மனிதவள அமைச்சர் ஜோசபின் தியோவுடன் செலட்டார் கிழக்கு முகாமில் உள்ள தடுப்பூசி மையத்தை பார்வையிட்டதாக அமைச்சர டான் சீ லெங் தன்னுடைய முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னர் தொற்று ஏற்படாத புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கோவிட் தடுப்பூசி பெறக்கூடிய இரண்டு மையப்படுத்தப்பட்ட தடுப்பூசி மையங்களில் இது ஒன்றாகும்.

தற்காலிக தொழிலாளர் தங்குமிடமாக செயல்பட்டு வந்த கிராஞ்சியில் உள்ள national service resort, தொழிலாளர்களுக்கான இன்னொரு தடுப்பூசி மையமாகும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நல்ல முன்னேற்றத்தை அடைந்து வருகிறது.

மருத்துவரீதியாக தகுதி வாய்ந்த 42,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்து இப்போது முழுமையாக தடுப்பூசி போட்டு முடித்துள்ளனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தடுப்பூசி என்பது கோவிட்-19 க்கு எதிரான நமது பாதுகாப்புகளை வலுப்படுத்துவத்த ஒரு முக்கியமான பாதுகாப்பாக உள்ளது என்று அமைச்சர் கூறினார்.

மேலும் அவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது இந்த தொற்றுநோய்களின் போது நமது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நாங்கள் உறுதியளிக்கும் மற்றும் கவனித்துக்கொள்வதற்கான ஒரு வழியாகும்.